இளையோருடன் திருத்தந்தை இளையோருடன் திருத்தந்தை 

அறிவுரை மடலையொட்டி திருத்தந்தையின் 3 டுவிட்டர்கள்

'கிறிஸ்து உயிரோடு இருக்கிறார். அவரே நம் நம்பிக்கை. வியத்தகு வழியில் இவ்வுலகிற்கு அவர் இளமையைக் கொணர்கிறார்' – திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'கிறிஸ்து உயிரோடு இருக்கிறார்' என்ற தலைப்பில், ஏப்ரல் 2, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட திருத்தூது அறிவுரை மடல் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

'கிறிஸ்து உயிரோடு இருக்கிறார். அவரே நம் நம்பிக்கை. வியத்தகு வழியில் இவ்வுலகிற்கு அவர் இளமையைக் கொணர்கிறார்' என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், தன் முதல் டுவிட்டர் செய்தியைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ், இம்மடலையொட்டி, மேலும் இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

"இறைவனின் வார்த்தை, திருப்பலி, கிறிஸ்து மற்றும் தூய ஆவியாரின் பிரசன்னம் ஆகியவற்றின் வழியே தன் சக்தியைப் புதுப்பித்துக்கொள்ளும் போது திருஅவை இளமையாக உள்ளது" என்ற சொற்கள் திருத்தந்தையின் இரண்டாம் டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.

"வயதில் நீங்கள் இளையோராய் இருந்து, அதே வேளையில் சக்தியற்று, குழம்பிப் போயிருந்தால், உங்களை புதுப்பிக்கும்படி இயேசுவிடம் கேளுங்கள். அவரிடம், நம்பிக்கை ஒருபோதும் தவறுவதில்லை" என்ற கருத்து மூன்றாவது டுவிட்டரில் இடம்பெற்றிருந்தது.

‘Christus Vivit’, அதாவது, கிறிஸ்து உயிரோடு இருக்கிறார், என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஏட்டில், ஏற்கனவே  மார்ச் 25ம் தேதி, அன்னை மரியாவுக்கு கிறிஸ்து பிறப்பு செய்தி அறிவிக்கப்பட்ட நாளன்று, இத்தாலியின் லொரேத்தோ நகரில் கையெழுத்திட்டுள்ளார் திருத்தந்தை.

இருப்பினும், இளையோருக்கு நெருக்கமாக வாழ்ந்த புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறையடி சேர்ந்ததையடுத்து, அவர் நினைவைச் சிறப்பிக்கும் நாளான, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருக்கென உருவாக்கியுள்ள திருத்தூது அறிவுரை மடலை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2019, 15:56