திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவின் சபைத் தலைவர் Russel Nelson, குழுவினர் திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவின் சபைத் தலைவர் Russel Nelson, குழுவினர் 

இவ்வுலகப் பொருள்களின் மீதுள்ள பற்றுகள் அகற்றப்பட..

2001ம் ஆண்டு செப்டம்பரில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும், 2016ம் ஆண்டு ஜூனில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அர்மேனியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் 56வது உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் பேருண்மையைக் கண்டறிவதற்கு, உலகப் பொருள்களில் நாம் பற்றின்றி வாழ வேண்டுமென்று, மார்ச் 09, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

“இவ்வுலகப் பொருள்களின் மீதுள்ள பற்றுகளைப் புறம்தள்ளி, கடவுளை நோக்கிப் பயணத்தைத் தொடர்கின்றவர்கள் மட்டுமே, அவர் பற்றிய பேருண்மையைக் கண்டுகொள்வார்கள்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று பதிவாகின.

மேலும், திருப்பீடத்துக்கான அர்மேனிய நாட்டு புதிய தூதர் Garen Nazarian அவர்கள், இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, நம்பிக்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தார்.

திருப்பீடத்துக்கும், அர்மேனியாவுக்கும் இடையே தூதரக உறவுகள், 1992ம் ஆண்டு மே 23ம் தேதி உருவாக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் சபைத் தலைவர் Russel M. Nelson அவர்களும், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்களும், கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri அவர்களும், இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2019, 16:10