மூவேளை செப உரையின்போது - 060119 மூவேளை செப உரையின்போது - 060119 

திருக்காட்சிப் பெருவிழா – திருத்தந்தையின் மூவேளை செப உரை

இயேசுவின் ஒளியில் நிறைவதற்கு நம்மையே அனுமதிக்கும்போது, கீழ்த்திசை ஞானிகளின் மகிழ்வை உணர்வோம் - திருத்தந்தையின் மூவேளை செப உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஞ்ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவின் முக்கியத்துவம் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையில் கூறினார்.

ஏரோது மற்றும் எருசலேமின் மறைநூல் அறிஞர்கள் கொண்டிருந்த அச்சம் குறித்து பேசியத் திருத்தந்தை, இன்றும், இவர்களைப்போல், இயேசுவின் வருகைக்கும், நம் சகோதரர், சகோதரிகளின் தேவைக்கும் மூடிய மனம் கொண்டவர்களாகச் செயல்படும் மக்கள் உள்ளனர் என்று கூறினார்.

தன் அதிகாரம் தன்னைவிட்டுப் போய்விடுமோ என்று அஞ்சிய மன்னன் ஏரோது, தன் மக்களின் உண்மை நலன் குறித்து கவலைகொள்ளாமல், தன் சுயநலம் குறித்தே கவலை கொண்டிருந்தார் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவால் கொணரப்பட்ட புதியனவற்றை அன்றையத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ இயலவில்லை என்றார்.

நாமும், நம் அச்சம் காரணமாக இதயங்களை மூடிக்கொள்ளாமல், இயேசுவின் ஒளியில் நிறைவதற்கு நம்மையே அனுமதிக்கும்போது, கீழ்த்திசை ஞானிகளின் மகிழ்வை உணர்வோம் என்று, தன் மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2019, 13:15