இத்தாலிய பிரதமர் ஜூசப்பே கோந்தே, திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய பிரதமர் ஜூசப்பே கோந்தே, திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை, இத்தாலிய பிரதமர் சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 17, வருகிற திங்களன்று தனது 82வது பிறந்த நாளைச் சிறப்பிக்கின்றார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வு, ஒளியாகச் சுடர்விடுவதற்கும், நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டரில், ஆலோசனைகளை வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், “நம் வாழ்வு சேவைக்கு அர்ப்பணிக்கப்படும்போது, அது ஒளியைப் பரப்புகின்றது, மகிழ்வின்  இரகசியம், பணிபுரிவதற்காக வாழ்வதாகும்” என்ற வார்த்தைகள் வெளியாகியுள்ளன.

மேலும், இத்தாலிய பிரதமர் ஜூசப்பே கோந்தே (Giuseppe Conte) அவர்கள், டிசம்பர் 15, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 17, வருகிற திங்களன்று தனது 82வது பிறந்த நாளைச் சிறப்பிக்கின்றார்.

1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் நாளன்று, அர்ஜென்டீனா நாட்டின் தலைநகர் புவனெஸ் அய்ரெஸ் நகரில் பிறந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கில், ஹோர்கே மாரியோ பெர்கோலியோ (Jorge Mario Bergoglio) என்ற பெயர் சூட்டப்பட்டார்.

1958ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி இயேசு சபையில் சேர்ந்து, 1969ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். 1973ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை, இயேசு சபை மாநில அதிபராகப் பணியாற்றிய இவர், 1998ம் ஆண்டு புவனெஸ் அய்ரெஸ் பேராயராகவும், 2001ம் ஆண்டில் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு சபையைச் சேர்ந்த முதல் திருத்தந்தை, தென் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் திருத்தந்தை, 8ம் நூற்றாண்டில், சிரியா நாட்டு திருத்தந்தை 3ம் கிரகரி அவர்கள் பதவி விலகியதற்குப் பின்னர், ஐரோப்பாவிற்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை போன்ற பெருமைகளுக்குரியவர், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2018, 13:41