2019 ஆம் ஆண்டு ஆசிய ஆயர்களை சந்தித்த திருத்தந்தை 2019 ஆம் ஆண்டு ஆசிய ஆயர்களை சந்தித்த திருத்தந்தை  

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள்

ஆசியத் தலத்திருஅவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆசிய தலத்திரு அவைகளின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில்  ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன.

FABC என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில் ஒன்றுகூடி இரண்டாம் நாளைச் சிறப்பித்தனர்.

ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசியத்தலத்திரு அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும்  ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின்  பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய தலத் திருஅவைகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணாத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார்.

இந்தியாவின் Daughters of St. Paul   என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2022, 14:16