திருக்குடும்பம் திருக்குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: திருக்குடும்பத்திடம் இறைவேண்டல்

நாசரேத்து திருக்குடும்பமே, குடும்பங்கள், இனிமேல் ஒருபோதும் வன்முறை, புறக்கணிப்பு, மற்றும், பிரிவினையை அனுபவிக்காதிருப்பதாக;

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Amoris laetitia அதாவது அன்பின் மகிழ்வு என்ற தன் திருத்தூது அறிவுரை மடலில், தனது தலைமைப் பணியின் நான்காவது ஆண்டில்,  2016ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கையெழுத்திட்டார். அம்மடல், அதே ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. குடும்பத்தில் அன்பு என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இம்மடல், ஒன்பது பிரிவுகளாக, 260க்கும் மேற்பட்ட பக்கங்களையும், 325 பத்திகளையும் கொண்டுள்ள நீண்டதொரு மடலாகும். அம்மடலில், திருமணம் மற்றும், குடும்ப வாழ்வை மையப்படுத்தி, இக்காலத்திற்கேற்ற முறையில் தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் குடும்பங்களுக்காக திருக்குடும்பத்திடம் இறைவேண்டல் செய்து, இம்மடலை நிறைவுசெய்துள்ளார்.

திருக்குடும்பத்திடம் இறைவேண்டல்

  • இயேசு, மரி, யோசேப்பே,
  • உங்களில் உண்மையான அன்பின் சிறப்பைத் தியானிக்கிறோம்;
  • நம்பிக்கையோடு உம்மை அணுகுகிறோம்.
  • நாசரேத்து திருக்குடும்பமே,
  • எங்கள் குடும்பங்களும், ஒருங்கிணைப்பு, மற்றும், இறைவேண்டலின் இடங்களாகவும், நற்செய்தியின் உறுதியான பள்ளிகள், மற்றும், சிறிய இல்லத் திருஅவைகளாகவும்
  • மாற அருள்புரியும்.
  • நாசரேத்து திருக்குடும்பமே,
  • குடும்பங்கள், இனிமேல் ஒருபோதும்
  • வன்முறை, புறக்கணிப்பு, மற்றும், பிரிவினையை அனுபவிக்காதிருப்பதாக;
  • மனக்காயம் அல்லது அவமானத்தை எதிர்கொண்ட எல்லாரும்
  • ஆறுதலையும், குணப்படுத்தலையும் உடனடியாகக் காண்பார்களாக.
  • நாசரேத்து திருக்குடும்பமே,
  • கடவுளின் திட்டத்தில் குடும்பத்தின் புனிதம், பிளவுபடாத்தன்மை மற்றும், அதன் அழகை,
  • நாங்கள் மீண்டும் ஒருமுறை மனதில் இருத்த உதவியருளும்.  
  • இயேசு, மரி, யோசேப்பே
  • இந்த எம் மன்றாட்டை அருள்கூர்ந்து கேட்டருளும். ஆமென். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2021, 14:31