குடும்ப ஆன்மீகம் குடும்ப ஆன்மீகம் 

மகிழ்வின் மந்திரம்: திருமணம், மற்றும் குடும்பத்தின் ஆன்மீகம்

உண்மையான குடும்ப வாழ்வில், அதன் அன்றாடப் போராட்டங்கள், துன்பங்கள், மற்றும், மகிழ்வுகளில் ஆண்டவரின் பிரசன்னம் இருக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலில் ஒன்பது பிரிவுகளில், திருமணம் மற்றும், குடும்ப வாழ்வை மையப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டு, இறுதியில், குடும்பங்களுக்காக திருக்குடும்பத்திடம் இறைவேண்டல் செய்து அம்மடலை நிறைவுசெய்துள்ளார். இறைவார்த்தையின் ஒளியில், குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும், இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு, திருமணத்தில் அன்பு, திருமண அன்பின் கனிகள், திருமணம் மற்றும் குடும்பம் பற்றிய மேய்ப்புப்பணி அம்சங்கள், பிள்ளைகளுக்கு முதல் கல்விக்கூடம் குடும்பம், திருமண வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தம்பதியரோடு திருஅவை உடன்பயணித்தல், தெளிந்துதேர்ந்து மேய்ப்புப்பணியாற்றல், அதில் கருணையை வெளிப்படுத்தல் போன்ற தலைப்புக்களில் அம்மடலின் 8 பிரிவுகளில் விளக்கியுள்ள திருத்தந்தை, அதன் 9ம் இறுதிப் பிரிவில், திருமணம் மற்றும் குடும்பத்தின் ஆன்மீகம் பற்றி, 314ம் பத்தி முதல், 325ம் பத்திவரை விளக்கியுள்ளார்.

ஆன்மீகத்தின் சிறப்புப் பண்புகள், குடும்ப வாழ்விலும், அதன் உறவுகளிலும் மிளிருகின்றன. உண்மையான குடும்ப வாழ்வில், அதன் அன்றாடப் போராட்டங்கள், துன்பங்கள், மற்றும், மகிழ்வுகளில் ஆண்டவரின் பிரசன்னம் இருக்கிறது (314 – 316). கிறிஸ்துவை மையமாக நினைத்து வாழ்கின்ற குடும்பத்தை, அதன் வாழ்வு முழுவதும் அவர் ஒன்றித்திருக்கச் செய்வார், மற்றும், ஒளிரச்செய்வார். குடும்ப செபம், இயேசுவின் பாஸ்கா பேருண்மையை சிறப்பான முறையில் வெளிப்படுத்தும் மற்றும் உறுதிப்படுத்தும். திருமணத் தம்பதியர், தங்கள் வாழ்வுப் பயணத்தின் மூலம், அதன் ஆழமான அர்த்தத்தை உணர்வார்கள். இவை போன்ற கருத்துக்களை, ஒன்பதாம் பிரிவின் 12 பத்திகளில் திருத்தந்தை பதிவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2021, 14:06