கிறிஸ்தவ திருமணம் கிறிஸ்தவ திருமணம் 

மகிழ்வின் மந்திரம் - திருமணம் வழி கிட்டும் பலன்

நாம் ஒவ்வொருவரும், நம் அன்பு மற்றும் அக்கறையால், பிறர் வாழ்வில் ஓர் அடையாளத்தை விட்டுச் செல்கின்றோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் இறுதிப் பிரிவில், 'அக்கறை, ஆறுதல், மற்றும் ஊக்கத்தின் ஆன்மீகம்' என்ற குறுந்தலைப்பின் கீழ் 4 பத்திகளில் விவரித்துள்ளதில், 322ம் பத்தியின் தொகுப்பு இதோ:

அனைத்துக் குடும்ப வாழ்வும், கருணையில் இடம்பெறும் மேய்ப்புப் பணியாகும். நாம் ஒவ்வொருவரும், நம் அன்பு மற்றும் அக்கறையால், பிறர் வாழ்வில் ஓர் அடையாளத்தை விட்டுச்செல்கின்றோம். ‘எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட நற்சான்றுக் கடிதம் நீங்களே…………அது மையினால் எழுதப்பட்டது அல்ல; மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது (2கொரி 3:2-3), என புனித பவுலுடன் இணைந்து நாமும் கூறலாம். நாம் ஒவ்வொருவரும், 'மனிதரைப் பிடிப்பவர்'(லூக் 5:10), இயேசுவின் பெயரால் மற்றவர்களுக்கு 'வலைகளைப் போடுகிறோம்' (லூக் 5:5), அல்லது ஒரு விவசாயி, தான் அன்புகூரும் பூமியை வளப்படுத்துவதற்காக, அதிலிருந்து மிக உயரியதை வெளிக்கொணர்வதற்காக, அதனை உழுவதுபோல் செயல்படுகிறோம். திருமணம் வழி கிட்டும் பலன் என்பது, மற்றவர்களுக்கு உதவுவதை உள்ளடக்குகிறது. ஏனெனில், எவரையும் அன்புகூர்வது என்பது, விவரிக்க முடியாத, அல்லது யூகிக்கமுடியாத ஒன்றை அவரிடமிருந்து எதிர்பார்ப்பதாகும். அதேவேளை, இந்த எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றுவதை சாத்தியமாக்குவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவதுமாகும். மற்றவர்களில் எண்ணற்ற நன்மைத்தனங்களை விதைத்து, அவைகள் வளர்வதற்கு நாம் உதவுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் இறைவனை வழிபடுவதற்குரிய வழியாகும் இது. (அன்பின் மகிழ்வு 322)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2021, 11:51