COMECE கூட்டமைப்பின் இலச்சினை COMECE கூட்டமைப்பின் இலச்சினை 

EU, வறியோரின் குரலுக்குச் செவிகொடுக்க விண்ணப்பம்

2020ம் ஆண்டில் ஐரோப்பியப் பணியாளர்களில் 10 விழுக்காட்டினர் ஏழ்மையில் துன்புற்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு உள்ள காலத்தில், வறுமையை அகற்றுவதற்கு தன் முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு, COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, EU அவை நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.    

பெருந்தொற்று முடிந்தபிறகு மேற்கொள்ளப்படும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளில், எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது மற்றும், ஏழைகளின் குரல்களுக்குச் செவிசாய்க்கவேண்டும் என்று, EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, ஐரோப்பிய ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

“கோவிட்-19 பெருந்தொற்று மற்றும், அதற்குப் பிறகு உள்ள சூழலில் வறியோரின் குரலுக்குச் செவிகொடுத்தல்” என்ற தலைப்பில், அக்டோபர் 13, இவ்வியாழனன்று, COMECE கூட்டமைப்பு வெளியிட்ட 11 பக்க அறிக்கையில், ஐரோப்பாவில் வறுமையை அகற்றுவதற்கு, நல்ல நடைமுறைகளும், பரிந்துரைகளும் வெளியிடப்பட்டுள்ளன

ஐரோப்பியப் பணியாளர்களில் 10 விழுக்காடு ஏழ்மையில்

கடந்த பத்து ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஏழ்மையும், சமுதாயப் புறக்கணிப்பும் குறைந்துவந்துள்ளபோதிலும், இந்நிலையை எதிர்கொள்ளும் ஆபத்திலுள்ள 2 கோடிப்பேரின் துயரங்களை நீக்குவதற்கு, 2020ம் ஆண்டில் ஐரோப்பா மேற்கொண்ட திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பதை அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.  

2019ம் ஆண்டில் EU நாடுகளில், ஏறத்தாழ 9 கோடியே 10 இலட்சம் பேர் ஏழ்மை மற்றும், சமுதாயப் புறக்கணிப்பு ஆகிய ஆபத்துக்களை எதிர்கொண்டனர் எனவும், 2020ம் ஆண்டில் ஐரோப்பியப் பணியாளர்களில் 10 விழுக்காட்டினர் ஏழ்மையில் துன்புற்றனர் எனவும் அவ்வறிக்கை கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2021, 15:28