தங்கள் குழந்தைகளுடன் ஒரு தம்பதி தங்கள் குழந்தைகளுடன் ஒரு தம்பதி 

மகிழ்வின் மந்திரம் - உண்மை பிறரன்பு, நிபந்தனையற்றது

எருசலேம் பொதுச்சங்கத்தின் காலத்திலிருந்தே, திருஅவையின் வழி என்பது கிறிஸ்துவின் வழியாக, இரக்கத்தின் வழியாக, மீட்டெடுத்தலின் வழியாக இருந்து வந்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவில்,  மேய்ப்புப்பணி அக்கறையில் நிதான நிலையின் அவசியம் பற்றி விளக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'ஒழுங்கற்றச் சூழல்கள் குறித்து பகுத்தறிதல்', என்ற குறுந்தலைப்பில் ஐந்து பத்திகளில் (296-300) விவரித்துள்ளதில், முதல் பத்தியின் தொகுப்பு இதோ:

பல்வேறு பலவீனங்கள் மற்றும் ஒழுங்கற்ற நிலைகளின் சுழல்கள் குறித்து ஆய்வுச் செய்துள்ளது உலக ஆயர்கள் மாமன்றம். நாம் தவறான பாதையை தெரிந்துகொள்ளாமல் இருக்க, இங்கு நான், முழு திருஅவைக்கும் ஒரு விடயத்தைக் கூற விழைகிறேன். திருஅவையின் வரலாறு முழுவதும் இடம்பெறும் ஒரு விடயத்தைக் குறித்து இரு வழிகளில் நாம் சிந்திக்கலாம். விலக்கி வைத்தல், மற்றும், மீண்டும் நிலைநிறுத்தல் என்பவையே அவை. எருசலேம் பொதுச்சங்கத்தின் காலத்திலிருந்தே, திருஅவையின் வழி என்பது கிறிஸ்துவின் வழியாக, இரக்கத்தின் வழியாக, மீட்டெடுத்தலின் வழியாக இருந்து வந்துள்ளது. திருஅவையின் வழி என்பது, எவரையும் நிரந்தரமாக கண்டனம் செய்து ஒதுக்குவதல்ல, மாறாக, இறைஇரக்கம் எனும் தைலத்தை, நேர்மையான இதயத்துடன் கேட்கும் எவர் மீதும் பொழிவதாகும். ஏனெனில், உண்மையானப் பிறரன்பு என்பது, அங்கீகாரத்தை எதிர்பார்க்காதது, நிபந்தனையற்றது, மற்றும் இலவசமானது. ஆகவே, பல்வேறு சிக்கல் நிலைகளை கணக்கில் எடுக்காத தீர்ப்புகளை தவிர்க்கும் அதேவேளை, தாங்கள் வாழும் நிலைகளால் மக்கள் எதிர்கொள்ளும் துயர்களை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையும் உள்ளது. (அன்பின் மகிழ்வு 296)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2021, 14:13