ஒருவருக்கொருவர் உதவுதல் ஒருவருக்கொருவர் உதவுதல் 

மகிழ்வின் மந்திரம் : உலகமும் சமுதாயமும்கூட நம் வீடுதான்

மற்றவர்களிடம் நெருக்கமாயிருத்தல், அக்கறையுடன் செயல்படுதல், மரியாதை செலுத்துதல் ஆகியவற்றைக் குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'ஒரு கல்வி அமைப்பாக குடும்ப வாழ்க்கை', என்ற உபதலைப்புடன், அறநெறிக் கல்வியை கற்றுக்கொடுக்கும் முதல் கல்விக்கூடம் குடும்பமே என்பதை 6 பத்திகளில் (274-279) விவரித்துள்ளார். அவற்றுள், 276ம் பத்தியில் திருத்தந்தை பதிவுசெய்துள்ள சிந்தனைகளின் தொகுப்பு இதோ:

சமூகமயமாக்கலுக்குரிய முதன்மை அமைப்பாக குடும்பம் உள்ளது, ஏனெனில், நாம் முதலில் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளவும், செவிமடுக்கவும், பகிரவும், பொறுமையுடன் செயல்படவும், மரியாதை காட்டவும், ஒருவருக்கொருவர் உதவவும், ஒன்றாக வாழவும் கற்றுக்கொள்கிறோம். உலகமும் சமுதாயமும்கூட நம் வீடு என்பதை உணர்த்தும் நம் கல்வியின் பணி, சமுதாயம் எனும் பெரிய வீட்டில் எப்படி ஒன்றாக வாழவேண்டும் என்பதிலும் நமக்கு பயிற்சி அளிக்கிறது. மற்றவர்களிடம் நெருக்கமாயிருத்தல், அக்கறையுடன் செயல்படுதல், மரியாதை செலுத்துதல் ஆகியவற்றை, குடும்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். நம்முடைய ஆபத்து நிறைந்த சுயநல மூழ்குதலிலிருந்து நாம் வெளியேறி, நம் அக்கறை, நம் இரக்கம், மற்றும் பாசத்திற்கு தகுதியானவர்களுடன் சேர்ந்துவாழ்கிறோம் என்பதை உணர்கிறோம். அருகருகே வாழ்வது, நாளின் வெவ்வேறு நேரங்களில் ஒருவரையொருவர் சந்தித்து, கடந்துசெல்வது, அனைவரையும் பாதிக்கும் எல்லாவற்றையும் குறித்து அக்கறை கொள்வது, சிறிய விடயங்களிலும் ஒருவருக்கொருவர் உதவுவது, என்பதை உள்ளடக்கிய, நுண்ணிய, தினசரி பரிமாணம் இல்லாமல், எந்த சமூகப் பிணைப்பும் இல்லை. ஒவ்வொரு நாளும் குடும்பம், அதன் உறுப்பினர்களைப் பாராட்டவும், அங்கீகரிக்கவும், புதிய வழிகளைக் கண்டுகொள்ள வேண்டும். (அன்பின் மகிழ்வு 276)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2021, 15:31