பிரெஞ்ச் மொழி கல்விக்கூடம் ஒன்றில் பிரெஞ்ச் மொழி கல்விக்கூடம் ஒன்றில் 

மகிழ்வின் மந்திரம் : தன்னடக்கத்துடன்கூடிய பாலியல் கல்வி

தன்னடக்கத்தின் வழியாக நாம் நம் தனியுரிமையைப் பாதுகாப்பதுடன், நம்மை ஒரு பொருள்போல் மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'பாலியல் கல்வியின் தேவை' குறித்து, அதன் 7ம் பிரிவில் விவரித்துக் கூறப்பட்டுள்ளவைகளில், 282ம் பத்தியின் கருத்துச் சுருக்கத்தை இப்போது காண்போம்:

தன்னடக்கம் எனும் ஆரோக்கியமான உணர்வால் வளம்பெற்ற பாலியல் கல்வி, தன்னுள்ளே பெருமதிப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இன்றோ சிலர், தன்னடக்கம் என்பதை, ஏதோ கடந்த காலங்களுக்கேயுரிய நினைவுச் சின்னம் என்பதுபோல் எண்ணுகின்றனர். தன்னடக்கம் என்பது, ஓர் இயற்கையான வழிமுறையாகும். அதன் வழியாக நாம் நம் தனியுரிமையைப் பாதுகாப்பதுடன், நம்மை ஒரு பொருள்போல் மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்கிறோம். தன்னடக்கம் எனும் நல்லுணர்வு இல்லையெனில், பாசம், பாலுணர்வு என்பவை, பிறப்புறுக்கள் மீதான மோகவெறிக்குள்ளும், ஆரோக்கியமற்ற செயல்பாடுகளுக்குள்ளும் தன்னை சுருக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. இதனால், அன்புகூர்வதற்குரிய நம் திறன் சிதைக்கப்படுவதுடன், பாலியல் வன்முறைகளின் வடிவங்கள், மற்றவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கும், அல்லது அவர்களைக் காயப்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது. (அன்பின் மகிழ்வு 282)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2021, 11:53