கொலம்பியாவில் அரசு எதிர்ப்பு போராட்டம் கொலம்பியாவில் அரசு எதிர்ப்பு போராட்டம் 

வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருடன் திருஅவை துணையாக நிற்கும்

கொலம்பியாவின் Bolivar பகுதியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல்களின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து தலத்திருஅவை ஆழ்ந்த கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொலம்பியாவின் Bolivar பகுதியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல்ககளின் அத்துமீறல் நடவடிக்கைகளால், குறைந்தபட்சம் 900 பேர் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளதாக அப்பகுதி ஆயர்  Ariel Lascarro Tapia அவர்கள் கவலையை வெளியிட்டுள்ளார்.

பலர் குடிபெயர்வதற்கும், பல கொலைகளுக்கும், எண்ணற்றோர் அச்சத்துடன் வாழ்வதற்கும் காரணமாக இருக்கும் ஆயுதக் கும்பல்கள் குறித்த பிரச்சனைக்கு, தேசிய அளவில், அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும் என காணொளிச் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார் Magangué ஆயர் Lascarro Tapia.

புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுத்தல், அவர்களின் அடிப்படை உரிமைகள், குறிப்பாக, வாழ்வதற்கான உரிமை, மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான உரிமை போன்றவை மதிக்கப்படுதல் வழியாக, அவர்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குதலின் அவசியத்தையும் சுட்டிக்காட்டி, தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் ஆயர் Lascarro Tapia.

வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தலத்திருஅவை எப்போதும் துணையாக நிற்கும் என்பதையும் தன் செய்தியில் உறுதி கூறியுள்ள ஆயர் Lascarro Tapia அவர்கள், தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், மக்கள் வாழ்வதற்கான ஊக்கத்தை திருஅவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

கனிமச் சுரங்கங்களையும், போதைப்பொருள் கடத்தல் பாதைகளையும் கொண்டுள்ள பொலிவார் பகுதியின் நிலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயன்றுவரும் ஆயுதக் குழுக்களின் மோதல்களால், எண்ணற்ற மக்கள் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர். அண்மைய நாட்களில் இது தொடரபாக குறைந்தபட்சம் 10 பேர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2021, 15:15