திருமண தம்பதி திருமண தம்பதி  

மகிழ்வின் மந்திரம் : திருமணத்திற்கு நிகராகுமா?

குடும்பங்கள் சீர்குலைவது என்பது, சமுதாயத்திற்கும், தனியார்களுக்கும், சமுதாய மதிப்பீடுகளுக்கும், நாடுகள், மற்றும் நகர்களின் ஒழுக்கரீதி மேம்பாட்டிற்கும் எதிரானது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “குடும்பங்களின் அனுபவங்களும் சவால்களும்” என்ற தலைப்பின்கீழ், இரண்டாவது துணைத் தலைப்பாக, “சில சவால்கள்” (50-57) என்பதை எடுத்துக்கொண்டு, 52ம் பத்தியில், திருமணமும், குடும்பங்களும் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள், மற்றும், இதில் நம் பொறுப்புணர்வுகள் குறித்து, திருத்தந்தை வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள்  இதோ....

குடும்பங்களை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமுதாயம், குடும்பங்களை பலவீனப்படுத்துவதன் வழியாக மேம்பட முடியும் என எவரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. குடும்பங்கள் சீர்குலைவது என்பது, சமுதாயத்திற்கும், தனியார்களுக்கும், சமுதாய மதிப்பீடுகளுக்கும், நாடுகள், மற்றும் நகர்களின் ஒழுக்கரீதி மேம்பாட்டிற்கும் எதிரானது. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான பிரிக்க முடியாத ஒன்றிப்பு குறித்த அர்ப்பணமே, ஒரு சமுதாய வாழ்வில் நற்கனிகளை வழங்கமுடியும் என்பதை உணரத் தவறியுள்ளோம். நிலையான தன்மையை வழங்கும் குடும்ப நிலைகள் குறித்து நாம் அங்கீகரிக்க வேண்டுமேயொழிய, ஒரே பாலின ஒன்றிப்புகள் போன்றவை, திருமணத்திற்கு நிகரானதாக ஒருநாளும் நோக்கப்படக்கூடாது. தற்காலிகமாக இணைந்து வாழ்தல், அல்லது, குழந்தைப் பேற்றை மறுக்கும் நிலைகள், சமுதாயத்தின் வருங்காலத்திற்கு எவ்வித உறுதியையும் வழங்குவதில்லை. ஆனால் இன்று, திருமண வாழ்வை பலப்படுத்தவும், குடும்பங்கள் குழந்தைகளை வளர்க்க உதவவும், திருமணங்களின் நிலையான தன்மையை ஊக்குவிக்கவும் எத்தனை பேர் முன்வருகிறார்கள் என்பது சிந்திக்கப்படவேண்டியது. (அன்பின் மகிழ்வு 52)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2021, 07:49