இந்தியக் குடும்பம் இந்தியக் குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: குடும்பத்தில் தந்தையின் முக்கியத்துவம்

ஒரு குடும்பத்தில் தந்தையின்றி இருக்கும் நிலை, பிள்ளைகள் வளர்ப்பை அதிகம் பாதிக்கும் (அன்பின் மகிழ்வு 55)

மேரி தெரேசா: வத்திக்கான்    

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் "அன்பின் மகிழ்வு" (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாவது பிரிவில், இன்றைய குடும்பங்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள் பற்றி, 50 முதல், 57ம் பத்திகள் வரை விளக்கியுள்ளார். ஆண்களைப் போன்று, பெண்களுக்கும் சம மாண்பு வழங்கப்படவேண்டும் என்பதை, 54வது பத்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, அதைத் தொடர்ந்து, 55வது பத்தியில் கூறியிருக்கும் கருத்துக்கள் இதோ...

குடும்ப வாழ்வில், குறிப்பாக, தங்கள் மனைவி, மற்றும், பிள்ளைகளைப் பாதுகாப்பது குறித்த விடயங்களில், ஆண்கள், முக்கியமான பங்கைக் கொண்டிருக்கின்றனர். பல ஆண்கள், குடும்பத்தில் தங்களது பங்கின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்றனர். அதற்கேற்றாற்போல், தங்களின் ஆண்மைப் பண்பையும் அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். குடும்பத்தில் தந்தையின்றி இருக்கும் நிலை, குடும்ப வாழ்வை வெகுவாய்ப் பாதிப்பதோடு, பிள்ளைகளை வளர்த்தெடுப்பதிலும், அவர்களைச் சமுதாயத்தில் ஒன்றிணைய வைப்பதிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. உடல் அளவிவோ, உணர்ச்சி அளவிலோ, உளவியல் அளவிலோ, ஆன்மீக அளவிலோ, எந்த நிலையிலும், குடும்பத்தில் தந்தையின்றி இருக்கும் நிலை, தந்தை என்ற ஒருவர் இருக்கும் சரியான இடத்தை, பிள்ளைகளுக்கு இல்லாததாக்கும். (அன்பின் மகிழ்வு 55)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2021, 15:13