மலேசிய ஆயர் பேரவை தலைவர் பேராயர் julian leow மலேசிய ஆயர் பேரவை தலைவர் பேராயர் julian leow 

கோவிட்-19 பெருந்தொற்றை அரசியலாக்கவேண்டாம்

கோவிட்-19 தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவது மற்றும், பெருந்தொற்றை குணமாக்கும் முறைகளில், வெளிப்படைத்தன்மை தேவை – மலேசிய ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மலேசியாவில், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மக்களைக் குணப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளிலும் ஊழல் தவிர்க்கப்படவேண்டும் என்று, அந்நாட்டு ஆயர்கள், நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று, அரசியலாக்கப்படுவதற்கோ, அல்லது, மலேசிய மக்களில் பிரிவினையை உருவாக்குவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்றும், இந்நோயை ஒழிப்பதற்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு வழிசெய்யப்படவேண்டும் என்றும், மலேசிய ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டின் தலைவர்கள், மலேசியாவை நன்முறையில் நடத்திச்செல்லும்பொருட்டு, தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளைப் பின்னுக்குத்தள்ளி, மக்கள், மற்றும், நாட்டின் மீள்கட்டமைப்பிற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு, ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

“இறைமக்கள்” என்ற தலைப்பில், மலேசிய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில், ஆயர்கள் இவ்வாறு நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவிட்-19 தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவது மற்றும், பெருந்தொற்றை குணமாக்கும் முறைகளில், வெளிப்படைத்தன்மை தேவை என்றும், இவை தொடர்பாக, குடிமக்களுக்கு, தகவல் அறியும் உரிமை உள்ளது என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2021, 12:53