ஹொண்டூராஸ் நாட்டின் இளம் தம்பதி ஒன்று ஹொண்டூராஸ் நாட்டின் இளம் தம்பதி ஒன்று 

மகிழ்வின் மந்திரம் - இளம் தம்பதியருக்கு வழிகாட்டல்

திருமணமான இளம் தம்பதியரின் திட்டங்கள், அவர்களின் சிந்தனை முறை, அவர்களின் உறுதியான அக்கறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

‘அன்பின் மகிழ்வு’ (Amoris Laetitia) திருத்தூது அறிவுரை மடலின் 36வது பத்தியில், இளம் தம்பதியருக்கு நாம் உதவ வேண்டிய வகையில் நம் அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது, ஆனால், எவ்வாறு இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது, என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்வரும் சொற்களில் விளக்கிக் கூறியுள்ளார்: 

சில சமயங்களில் நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளை முன்வைத்து மற்றவர்களுடன் நடந்துகொள்ளும் முறை, இன்றைய சிக்கலான சூழ்நிலைக்கு பங்களிக்க உதவியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, நாம் தாழ்ச்சியுடனும், எதார்த்த நிலையுடனும் செயல்படவேண்டும். சுயவிமர்சனத்தின் ஆரோக்கியமான அளவீடு நமக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அன்பில் வளர்வதற்கும், ஒருவருக்கொருவர் உதவிசெய்வதற்கும், திருமணம் விடுக்கும் அழைப்புகள், பலவேளைகளில், இனப்பெருக்கம் செய்யவேண்டிய கடமையை அதிகம் வலியுறுத்துவதால், ஓரம் தள்ளப்பட்டதாகி விடுகின்றன. திருமணமான இளம் தம்பதிகளுக்கு நாம் எப்போதும் உறுதியான வழிகாட்டுதல்களை வழங்குவதில்லை. அவர்களின் திட்டங்கள், அவர்களின் சிந்தனை முறை, அவர்களின் உறுதியான அக்கறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம். சில வேளைகளில், திருமணம் குறித்த நடைமுறைக்கு ஒத்திணங்கிச்செல்லாத, தெளிவற்ற, அதேவேளை, ஏறக்குறைய  செயற்கை இறையியல் கொள்கையையும் நாம் முன்மொழிந்துள்ளோம். இவை, உண்மையான குடும்பங்களின் உறுதியான சூழ்நிலைகள், மற்றும், நடைமுறை சாத்தியங்களிலிருந்து, வெகுதொலைவில் உள்ளன. இவ்வகையான மிகைப்படுத்தப்பட்ட கருத்துருவாக்கம், குறிப்பாக, கடவுளின் கருணையின்மீது நம்பிக்கையைத் தூண்டுவதில் நாம் தோல்வியுறும்போது, திருமணத்தை மிகவும் விரும்பத்தக்கதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்ற உதவுவதில்லை,  மாறாக, அதற்கு நேரெதிராகவேச் செல்கின்றது. (அன்பின் மகிழ்வு 36)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2021, 15:02