குடும்பத்தில் மகிழ்வு குடும்பத்தில் மகிழ்வு 

'மகிழ்வின் மந்திரம்' - நலமான சமுதாயம்

ஒரு சமுதாயத்தில், கலாச்சார, மற்றும், சமுதாய மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

இன்றைய உலகில் குடும்பங்களின் நிலை குறித்து உலக ஆயர் மாமன்றம் ஆய்வு செய்ய வழிவகைச் செய்யப்பட்டது. (அன்பின் மகிழ்வு 2)

கொஞ்சம் நின்று சிந்தித்துப் பார்ப்போம். குடும்பம் மற்றும் திருமணத்தின் முக்கியத்துவம் குறித்த நம் விழிப்புணர்வுகளைப் புதுப்பிப்பதன் தேவையை உணர்வோம். அதன் வழி,  பரந்து விரிந்த ஒரு கண்ணோட்டத்தைப் பெறுவோம். குடும்பம் தொடர்புடைய கோட்பாடுகள், நன்னெறி, ஆன்மீகம், மற்றும், மேய்ப்புப்பணி சார்ந்த கேள்விகளுக்கு நாம் விடை தேட, கலந்துரையாடல்கள் தேவைப்படுகின்றன, என்பதை உணர்ந்ததாக 2015ம் ஆண்டில், உலக ஆயர் மாமன்றம் இடம்பெற்றது. இவ்வாண்டு, திருஅவையில் சிறப்பிக்கவிருக்கும் குடும்ப ஆண்டும் அதைத்தான் வலியுறுத்த வருகின்றது.

சமுதாயத்தின் ஓர் அங்கமாக, அடிப்படையாகக் குடும்பம் விளங்குகிறது. ஒரு சமுதாயத்தில், கலாச்சார, மற்றும், சமுதாய மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உறுதியான குடும்பங்களே, நலமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவை. இவற்றை மனதில் கொண்டு, குடும்ப மதிப்பீடுகளை மதித்துச் செயல்படுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2021, 14:14