பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேன்மைமிகு அந்தோனிசாமி அவர்கள் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேன்மைமிகு அந்தோனிசாமி அவர்கள் 

புதிய ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி

வாழ்வின் அர்த்தம் என்பது, எந்தச் சூழ்நிலையிலும் வாழப் பழகிக்கொள்வது, மனநிறைவோடு இருப்பதாகும்

மேரி தெரேசா - வத்திக்கான்

வத்திக்கான் வானொலியின் அன்பு இதயங்கள் அனைவருக்கும் மலரவிருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புதிய 2021ம் ஆங்கில ஆண்டு உலகினர் எல்லாருக்கும் உடல், உள்ள சுகம்தரும் ஆண்டாக அமையவதாக.

புதிய ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளில் 2020ம் ஆண்டை செலவழித்துள்ள நமக்கு, 2021ம் ஆங்கில ஆண்டுக்கென, புத்துயிரூட்டும் செய்தியை வழங்குகிறார், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேன்மைமிகு அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள்.

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக இருப்பதையும் தாண்டியது.

சொந்தம் கொள்கிற உணர்விலும்,

நம்மில் புதைந்திருக்கின்ற நல்ல குணங்களை வளப்படுத்துவதிலும்,

வாழ்வின் அர்த்தம் அடங்கியுள்ளது.

வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடுவோரைவிட, அர்த்தத்தைத் தேடுவோரே வாழ்வில் சிறந்து விளங்குகின்றார்.

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ...

1.       பிறரோடு சொந்தம் கொள்வது,

2.       வாழ்வின் நோக்கத்தைக் கண்டுணர்வது (எதை விரும்புகிறோம் என்பதைவிட எதைக் கொடுக்கிறோம் என்பது முக்கியம்)

3.       கடந்து செல்லுதல்

4.       நம் வாழ்வு பற்றி கதை சொல்லுதல்

மொத்தத்தில் வாழ்வின் அர்த்தம் என்பது, எந்தச் சூழ்நிலையிலும் வாழப் பழகிக்கொள்வது, மனநிறைவோடு இருப்பதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 December 2020, 13:57