கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் 

“கன்னி ஈன்ற செல்வமே” கிறிஸ்மஸ் பாடல் பிறந்த கதை

“கன்னி ஈன்ற செல்வமே” என்று துவங்கும் பாடல், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் காலங்களில் அனைவரையும் ஓர் ஆன்மீகத் தேடலுக்கு இட்டுச்செல்லும் புகழ்மிக்க பாடல்களில் ஒன்று

மேரி தெரேசா: வத்திக்கான்

“கன்னி ஈன்ற செல்வமே” என்று துவங்கும் பாடல், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் காலங்களில் அனைவரையும் ஓர் ஆன்மீகத் தேடலுக்கு இட்டுச்செல்லும் புகழ்மிக்க பாடல்களில் ஒன்று. எஸ்.ஜானகி அம்மா அவர்களின் தேனிசைக் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் எழுத்துக்கும் இயக்கத்துக்கும் உரிமையாளர் இயேசு சபை அருள்பணி மரிய சிகாமணி அவர்கள். இவர், மண்ணில் பூத்த விண்மலரே என்ற கிறிஸ்மஸ் பாடல், கல்மனம் கரைய என்ற தவக்காலப் பாடல் உட்பட பல திருவழிபாட்டுப் பாடல்களுக்கு சொந்தக்காரர். இயேசு சபையில் இளம் துறவியாக இருந்தபோது, கன்னி ஈன்ற செல்வமே என்ற பாடல் இவரில் உருவானது. இந்தப் பாடலை, அண்மையில் மாதா தொலைக்காட்சியும், ஆக்கபெல்லா இசை வடிவில் வெளியிட்டுள்ளது. பணி ஓய்வில் உள்ள இயேசு சபை அருள்பணி சிகாமணி அவர்கள், அண்மையில், மதுரை இலொயோலா வெப் டிவியில் அந்த பாடல் உருவானமுறை பற்றி விவரித்துள்ளார். அதனை இப்போது வழங்குகின்றோம்

“கன்னி ஈன்ற செல்வமே” கிறிஸ்மஸ் பாடல் பிறந்த கதை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2020, 14:53