மெக்சிகோவில் திருஅவையின் பணி மெக்சிகோவில் திருஅவையின் பணி 

தென் அமெரிக்காவில் நோயாளிகளுக்கு ஒன்றிணைந்த பணி

வெனெசுவேலாவில், நோயாளிகள், மற்றும், வயது முதிர்ந்தோருக்கு பணியாற்றும், திருஅவையின் AMDEAM அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட 35வது ஆண்டு நிறைவு, அண்மையில் சிறப்பிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் அமெரிக்க நாடுகளில், நோயாளிகளுக்குப் பணியாற்றும் கத்தோலிக்க அமைப்புகள், இவ்வாண்டில் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளன என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

வெனெசுவேலா, கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில், நோயாளிகள் மற்றும், வயது முதிர்ந்தோருக்குப் பணியாற்றும் மறைப்பணியாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து, ஜூலை 8, வருகிற புதனன்று, இணையதளம் வழியாக கூட்டம் ஒன்று நடத்த தீர்மானித்துள்ளன. 

நோயாளிகள் மற்றும், வயது முதிர்ந்தோருக்கு, கொலம்பியாவில் பணியாற்றும் RENAE அமைப்பு, மெக்சிகோவில் பணியாற்றும் EMU அமைப்பு, வெனெசுவேலாவில் பணியாற்றும் AMDEAM அமைப்பு ஆகிய மூன்றும், இவ்வாண்டின் பாதியிலிருந்து ஒன்றுசேர்ந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளன.

வெனெசுவேலாவில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட 35வது ஆண்டு நிறைவு அண்மையில் சிறப்பிக்கப்பட்டது எனவும், தென் அமெரிக்காவில் பணியாற்றும் பாப்பிறை மறைப்பணி கழகத்தின் ஒத்துழைப்புடன், இந்த அமைப்புகள், நோயாளிகள் மற்றும், வயது முதிர்ந்தோருக்குப் பணியாற்றி வருகின்றன என்றும், பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2020, 14:34