தென் கொரியாவில் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி தென் கொரியாவில் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி 

நம் தினசரி வாழ்வே ஓர் ஆசீர்வாதம்

இந்த துன்பகரமான வேளையில் மக்களிடையே, ஒருவர் ஒருவருக்குரிய அன்பும், மதிப்பும் அதிகரித்துள்ளது, துயரத்திலும் கிடைத்துள்ள ஓர் ஆசீர்வாதம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளை நோய் காலத்தில் தென் கொரிய மக்கள் காட்டிவரும் பொறுமைக்கும், தியாக வாழ்வுக்கும் தன் நன்றியை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் Andrew Yeom Soo-jung.

தொற்று நோய் காரணமாக, திருப்பலிகளில் மக்கள் பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளபோதிலும், தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து காப்பாற்றி வருவதற்கும், பொதுத் திருப்பலிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், விசுவாசிகளுக்காக தனிப்பட்ட முறையில் விசுவாசிகளின் நலனுக்காக அருள்பணியாளர்கள் திருப்பலியை நிறைவேற்றி வருவதற்கும் தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளியிட்டார், செயோல் உயர்மறைமாவட்ட கர்தினால்.

இந்த துன்பகரமான வேளையில் மக்களிடையே, ஒருவர் ஒருவருக்குரிய அன்பும், மதிப்பும் அதிகரித்துள்ளது, துயரத்திலும் கிடைத்துள்ள ஓர் ஆசீர்வாதம் என்ற கர்தினால் Yeom அவர்கள், நம் தினசரி வாழ்வே ஓர் ஆசீர்வாதம் என்ற உள்ளுணர்வு தோன்றியுள்ளது, நம் விசுவாச வாழ்வின் வளர்ச்சிக்கு, பெரிய அளவில் உதவும் எனவும் கூறினார்.

எம்மாவு செல்லும் வழியில் நிச்சயமற்ற ஒரு நிலையில் இருளில் நடப்பதுபோல் இருந்த இரு சீடர்களின் பயணத்தை ஒத்ததாக இக்காலம் இருந்தாலும், இயேசு நம்முடன் நடந்து வருகிறார், நம்முடனேயே இருக்கிறார் என்ற நம்பிக்கை, நம்மைக் காப்பாற்றும் என மேலும் கூறினார் கர்தினால் Yeom. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2020, 14:42