திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சில அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சில அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் 

காணொளிகள் வழியாக சரியான அரசியல் வாழ்வு

கருவில் வளரும் குழந்தையின் வாழ்வைப் பாதுகாத்தல், புலம்பெயர்ந்தோரை வரவேற்றல், இனவெறி மற்றும், சமய சகிப்பற்றதன்மைக்குப் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தல் போன்றவற்றை, அரசியல் வாழ்வில் சரியாக ஈடுபடுவதால் உதவ முடியும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கர், தங்களின் விசுவாசத்தை அரசியல் தளங்களில் வெளிப்படுத்துமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், காணொளிகள் வழியாக ஊக்கப்படுத்தியுள்ளனர்.

அரசியல் வாழ்வில், செபம் மற்றும் செயல்பாட்டால் தூண்டப்படவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்பட்ட திருஅவையின் போதனைகளை கத்தோலிக்கர் செயல்படுத்தவும் உதவும் தகவல்களை, காணொளிகள் வழியாக, ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.

பிரமாணிக்கமுள்ள குடிமக்களாக வாழ்வதற்குத் தேவைப்படும் நல்ல மனசாட்சிகளை உருவாக்குவது, கத்தோலிக்கரின் அரசியல் பொறுப்புணர்வு, பொது வாழ்வில் பங்குபெறுகையில் கத்தோலிக்கரின் ஈடுபாடு போன்றவைகளை, காணொளிகள் வழியாக, அமெரிக்க ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.

கத்தோலிக்கர் பொது வாழ்வில் பங்கெடுத்தல், மனித வாழ்வு மற்றும், மாண்பை பாதுகாத்தல், பொது நலனை ஊக்குவித்தல், தங்கள் அயலவரை அன்புகூர்தல், இறையாட்சியை எழுப்புகையில் கிறிஸ்துவோடு பிரமாணிக்கமுள்ள குடிமக்கள் பணியாற்றுவது ஆகிய தலைப்புகளில் ஆயர்கள் காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.

கருவில் வளரும் குழந்தையின் வாழ்வைப் பாதுகாத்தல், புலம்பெயர்ந்தோரை வரவேற்றல், இனவெறி மற்றும், சமய சகிப்பற்றதன்மைக்குப் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தல், குடும்பங்களுக்கு ஆதரவு, வறுமையை அனுபவிப்பவருக்கு தோள்கொடுத்தல் போன்றவற்றை, அரசியல் வாழ்வில் சரியாக ஈடுபடுவதால் உதவ முடியும் என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு காணொளியும் செபத்துடன் நிறைவு பெறுகிறது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2020, 15:41