கோவிலில் தேசிய கொடியுடன் கொண்டாட்டம் கோவிலில் தேசிய கொடியுடன் கொண்டாட்டம் 

இந்திய அரசியலமைப்புக்கு பிரமாணிக்கம், கத்தோலிக்கர்

இந்தியாவில், கடந்த 450 ஆண்டுகால வரலாற்றில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக நாம், அமைதியாக, மதிப்புடன் மற்றும், எவருக்கும் கெடுதல் இழைக்காமல் வாழ்ந்து வருகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவுக்கும், அதன் அரசியலமைப்புக்கும், கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் தாங்கள் பிரமாணிக்கமாக இருப்போம் என்று, மங்களூரு தலத்திருஅவை உறுதிமொழி எடுத்துள்ளது.

இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டுமுறை, சீரோ-மலபார் வழிபாட்டுமுறை, சீரோமலங்கரா வழிபாட்டுமுறை ஆகிய மூன்றும் இணைந்து இந்திய கத்தோலிக்கரை கேட்டுக்கொண்டதன்பேரில், கர்நாடக மாநிலத்தின் மங்களூரு திருஅவை ஏற்பாடு செய்த பேரணியில் ஏறத்தாழ முப்பதாயிரம் கத்தோலிக்கர் பங்கெடுத்து, தங்களின் பிரமாணிக்கத்தை வெளிப்படுத்தினர்.

மங்களூரு நகருக்கு ஏறத்தாழ ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Madanthyar என்ற இடத்தில், பிப்ரவரி 2, இஞ்ஞாயிறன்று ஏராளமான கத்தோலிக்கர் கூடி இவ்வாறு, நாட்டிற்கும், கிறிஸ்தவத்திற்கும் தாங்கள் விசுவாசமாக இருப்பதாக அறிவித்தனர்.

செப்டம்பர் 8, பொது விடுமுறையாக

மேலும், அக்கத்தோலிக்கர், அன்னை மரியா பிறந்த விழாவான செப்டம்பர் 8ம் தேதி, பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அரசை விண்ணப்பித்துள்ளனர்.    

"கத்தோலிக்க மஹா சாமவேஷா-2020 (Catholic Maha Samavesha-2020)" என்ற பெயரில் இடம்பெற்ற பேரணியில், மங்களூரு ஆயர் Peter Paul Saldanha, Puttur சீரோமலங்கரா வழிபாட்டுமுறை ஆயர் Geevarghese Mar Divannasios, Beltangady சீரோ-மலபார் வழிபாட்டுமுறை ஆயர் Lawrence Mukkuzhy உடப்ட, பல்லாயிரக்கணக்கான அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் பங்குபெற்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆயர் சல்தான்ஹா அவர்கள், கடந்த 450 ஆண்டுகால வரலாற்றில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக நாம், அமைதியாக, மதிப்புடன் மற்றும், எவருக்கும் கெடுதல் இழைக்காமல் வாழ்ந்து வருகிறோம், நம் தனிப்பட்ட மற்றும், சமுதாய வாழ்வில், மனிதர் மற்றும், மனித சமுதாயத்தின் நன்மைத்தனத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம் என்று கூறினார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2020, 15:33