யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ 

மியான்மாரில் துறவிகளுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும்

மியான்மாரின் 60 விழுக்காட்டு மக்கள், 40 வயதுக்கு கீழுள்ளவர்கள். அவர்களுக்கு வேலைகளும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டால், வியப்புக்களை ஆற்றுவார்கள். மியான்மார் இளைஞர்கள், அண்டை நாடுகளில் நவீன அடிமை முறைகளில் அகப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாட்டின் பொதுத்தேர்தல்களில் வாக்களிப்பது, ஒரு புனிதக் கடமை என்று, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்தியுள்ளார்.

மியான்மாரில் இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல்களை முன்னிட்டு பிப்ரவரி 6, இவ்வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ள, யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள், பொதுத்தேர்தல்களில், துறவிகள் வாக்களிப்பதைத் தடைசெய்துள்ள அரசியலமைப்பு எண்ணை அகற்றுமாறு அரசை வலியுறுத்தியுள்ளார்.

மக்களாட்சி மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மார் நாடு எதிர்கொள்ளும் மற்ற சவால்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.   

மியான்மார் அரசியலைமப்பு எண் 392(a)ல், புத்தமத துறவிகள், கத்தோலிக்க அருள்பணியாளர்கள், துறவிகள், பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் போதகர்கள், இஸ்லாம் மதக் குருக்கள் போன்றோர் பொதுத்தேர்தலில் வாக்களிக்க தடைசெய்யப்பட்டுள்ளனர்.

கர்தினால் என்ற முறையில், குடிமக்கள் வாக்களிப்பதற்கு அறிக்கைகளை வெளியிட முடியும், உரைகள் ஆற்ற முடியும், ஆனால் நானே வாக்களிப்பதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளேன் என்று, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் போ.

சனநாயகம், மனித மாண்பு மற்றும், அனைத்துவிதமான அடிப்படை மனித உரிமைகள் பாதுகாப்படுவதை ஊக்குவிப்பதன் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மார் ஒரு நாடாக, அறுபது ஆண்டு கால போர் மற்றும், ஒருவர் ஒருவர் மீதுள்ள வெறுப்பால் காயப்பட்டுள்ளது என்ற கவலையையும் வெளியிட்டுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2020, 14:58