நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் திரட்டும் இளையோர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் திரட்டும் இளையோர் 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பல்சமயக் குழு உதவி

பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவை, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளுக்கும், செபங்களுக்கும் அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்சின் தென் பகுதியில் இவ்வாரத்தில் உருவான கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்சமயக் குழு ஒன்று இடர்துடைப்பு உதவிகளை ஆற்றி வருகின்றது.

பிலிப்பீன்சின் Cotabato பகுதியில், அக்டோபர் 31, இவ்வியாழனன்று இடம்பெற்ற கடுமையான நிலநடுக்கத்தில், 20 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் முற்றிலுமாகவும், 1,700 வீடுகள் பாதியளவும் சேதமடைந்துள்ளன.

இம்மக்களுக்கு உதவி வருகின்ற, Duyog Marawi என்ற குழு, Marawi நகரில் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏற்கனவே உதவி வருகிறது என்று யூக்கா செய்தி கூறுகின்றது.

இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையும், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உதவிகளுக்கும், செபங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இதே பகுதியில் அக்டோபர் 16ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏழாயிரத்திற்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்தன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2019, 15:01