ஈராக் அரசு அதிகாரிகளுடன், கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ ஈராக் அரசு அதிகாரிகளுடன், கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ 

ஈராக் அரசு மக்களின் நியாயமான குரலுக்கு செவிசாய்க்க அழைப்பு

ஈராக் கர்தினால் சாக்கோ - தேவையில் இருக்கும் மக்களின் நியாயமான குரலுக்கு அரசு செவிமடுக்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை இடம்பெறுவது குறித்தும், இவ்வெள்ளியன்று நடைபெற்ற போராட்டங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறித்தும், அந்நாட்டு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ அவர்கள், தேவையில் இருக்கும் மக்களின் நியாயமான குரலுக்கு அரசு செவிமடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

கர்தினால் சாக்கோ அவர்களைத் தொடர்ந்து, ஈராக்கின் இஸ்லாமியத் தலைவர் அலி சிஸ்தானி அவர்களும், மக்கள் குழப்பத்தை உருவாக்குவதைத் தவிர்த்து, கட்டுக்கோப்பான சூழலைக் கையாளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, நாங்கள் பசியாய் இல்லை, ஆனால் மாண்புக்காகப் போராடுகிறோம் என்று, போராட்டங்களில் ஈடுபடுவோர் கூறியுள்ளனர்.

இவ்வெள்ளியன்று இடம்பெற்ற வன்முறையில் மட்டும் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர் மற்றும், ஏறத்தாழ 300 பேர் காயமடைந்துள்ளனர்.  

இதற்கிடையே, இந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் நடந்த இதேபோன்ற போராட்டங்களின்போது ஈராக் முழுவதும் ஏறத்தாழ 150 பேர் இறந்தனர். அவர்களில் பாதிப்பேர், இராணுவம் மற்றும் அரசு அலுவலக கட்டடங்களுக்குள் நுழைய முற்பட்டபோது இறந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

போரால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் வேண்டும், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அங்கு மக்கள் போராடி வருகின்றனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2019, 15:38