அமைதிப்பணியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ தொலைக்காட்சி அமைப்பினர் அமைதிப்பணியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ தொலைக்காட்சி அமைப்பினர் 

கொரியா, ஜப்பானுக்கு இடையே உரையாடலின் பாலம்

தென் கொரியத் தலைநகர் செயோலை மையமாகக் கொண்டு இயங்கும், மறைப்பணி தொலைக்காட்சி என்ற அலைவரிசை, தென் கொரியா மற்றும், ஜப்பான் நாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டநிலைகளைக் குறைப்பதற்கு முயற்சித்து வருகிறது

மேரி தெரேசா – வத்திக்கான்

தென் கொரியா மற்றும், ஜப்பான் நாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டநிலைகளைக் குறைக்கும் முயற்சிகளில், ஒரு கிறிஸ்தவ தொலைக்காட்சி அமைப்பு தீவிரமாக இறங்கியுள்ளது என்று ஆசியச் செய்தி கூறுகின்றது.

தென் கொரியத் தலைநகர் செயோலை மையமாகக் கொண்டு இயங்கும், மறைப்பணி தொலைக்காட்சி என்ற அலைவரிசையின் தலைவர் Jun Jae-won அவர்கள், South China Morning Postக்கு வழங்கிய நேர்காணலில், இவ்விரு நாடுகளுக்கு இடையே பதட்டங்களைக் குறைப்பதற்குரிய, தங்களது இலக்கில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தென் கொரிய மக்கள் பலர், தேசியவாத உணர்வில், ஜப்பானுக்குச் செல்வதை நிறுத்தியிருந்தாலும், எங்களைப் போன்ற சிந்தனையாளர்களும் உள்ளனர் என்றும், Jun Jae-won அவர்கள் கூறினார்.

ஜப்பான், தென் கொரியாவை ஆக்ரமித்திருந்த காலத்தில், கொரியர்கள் வேலைசெய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதற்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட வேண்டுமென, கடந்த ஜூலையில் தென் கொரிய நீதிமன்றம் ஒன்று ஆணையிட்டது.

இதற்கிடையே, இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜப்பான் படைவீரர்களுக்கு பாலியல் அடிமைகளாக பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்ட கொரியப் பெண்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டுமென, பல்வேறு மனித உரிமை குழுக்கள் ஜப்பானை வலியுறுத்தி வருகின்றன.

இவற்றைத் தொடர்ந்து நிலவிவரும் பதட்டநிலைகளைக் குறைப்பதற்கு அந்த தொலைக்காட்சி அலைவரிசை முயற்சித்து வருகிறது. (AsiaNews) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2019, 16:12