மெக்சிகோவில் tortilla பாரம்பரிய ஓட்டத்தில் பெண்கள் மெக்சிகோவில் tortilla பாரம்பரிய ஓட்டத்தில் பெண்கள் 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்

மெக்சிகோ நாட்டின் Puebla மாநிலத்திலுள்ள Palafoxiana நூலகம், அந்நகரின் வரலாற்று சிறப்புமிக்க மையமாகும். 1646ல் உருவாக்கப்பட்ட இந்த நூலகத்தில், 15-20ம் நூற்றாண்டு வரையுள்ள 45,000த்திற்கு அதிகமான, நூல்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் உள்ளன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

மெக்சிகோ நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளவேளை, அந்த வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு, உடனடியாக நடவடிக்கைகள் அவசியம் என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

மெக்சிகோ நகரில் நடைபெற்ற 375வது Palafoxian கருத்தரங்கில் உரையாற்றிய, Puebla பேராயர் Víctor Sánchez Espinosa அவர்கள், அண்மையில் பெண்கள் நடத்திய போராட்டத்தில் சேதங்கள் இடம்பெற்றதைக் குறிப்பிட்டு, தங்களின் குறைகளை வெளிப்படுத்துவதற்கு, இது சரியான முறை அல்ல என்று கூறினார்.

அதேநேரம், போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொருக்கும் உரிமை உள்ளது, இந்த விவகாரத்தில் சமுதாயத்தில் பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு அவசியம் என்றும், பேராயர் Sánchez Espinosa அவர்கள் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை, கொலை, வன்முறை மற்றும் ஏனைய குற்றங்களுக்குப் பெண்கள் தொடர்ந்து பலிகடாக்களாக ஆகிக்கொண்டிருக்க முடியாது என்றுரைத்துள்ள பேராயர், வாழ்வு புனிதமானது, எனவே இது பாதுகாக்கப்பட வேண்டும், இதனால், பெண்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சனையைக் களைவதற்கு சமுதாயத்தின் அனைத்துத் துறைகளும் செயலில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இலத்தீன் அமெரிக்காவில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. இந்நாட்டில், ஒரு நாளில் ஏறத்தாழ மூன்று பெண்கள் கொல்லப்படுகின்றனர், மேலும், 49 பேர் பாலியல் முறையில் துன்புறுத்தப்படுகின்றனர்.

கடந்த வெள்ளியன்று, மெக்சிகோ நகரில், பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு எதிராக பெண்கள் நடத்திய பேரணி, அந்நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட பேரணிகளில் பெரிது என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது. (Fides)

Palafoxiana நூலகம், யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் 2005ம் இடம்பெற்றது. மெக்சிகோவில் காலனி ஆதிக்கம் நடைபெற்ற காலத்தில் உருவாக்கப்பட்ட முதல் பொது நூலகமாகிய இது, அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நூலகமாகவும் கருதப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2019, 16:06