மதத்தின் பெயரால் இடம்பெறும் வன்முறைக்கு எதிராக... மதத்தின் பெயரால் இடம்பெறும் வன்முறைக்கு எதிராக... 

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக..

இந்தியாவில் மதத்தின் போர்வையில் நடத்தப்படும் வன்முறைகள், நாட்டு நலனுக்கு எவ்வகையிலும் உதவாது - மும்பை உயர்மறைமாவட்ட செய்தி தொடர்பாளர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மதத்தின் பெயரால் தாக்கிக் கொலைபுரியும் வன்முறைப்போக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டவேண்டும் என, அந்நாட்டின் மிகவும் முக்கியமான 49 பேர் இணைந்து கையெழுத்திட்டுள்ள கடிதத்தை வரவேற்றுள்ளனர், இந்திய திருஅவை அதிகாரிகள்.

இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த, மிகவும் முக்கியமான 49 பேர் இணைந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இஸ்லாமியர்களும், தலித் மக்களும், ஏனைய சிறுபான்மையினரும் மதத்தின் போர்வையில் தாக்கிக் கொலைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

'ஜெய ஸ்ரீராம்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியும், அதனைக் கூறுமாறு வலியுறுத்தியும் சிறுபான்மையினர் அடித்துக்கொல்லப்படுவது குறித்து, தங்கள் கண்டனத்தை வெளியிட்டு, இப்பிரபலங்கள் அனுப்பியுள்ள கடிதத்தை வரவேற்று, செய்தி வெளியிட்டுள்ள டெல்லி உயர்மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் அருள்பணி சவரிமுத்து சங்கர் அவர்கள், இத்தகைய வன்முறைப்போக்குகளுக்கு எதிராக, இந்துமதத் தலைவர்கள் குரல் எழுப்பவேண்டியது அவசியமாகிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மதத்தின் போர்வையில் நடத்தப்படும் வன்முறைகள், நாட்டு நலனுக்கு எவ்வகையிலும் உதவாது என, இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார், மும்பை உயர்மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் Nigel Barrett  (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2019, 16:45