SECAM நடத்திய கூட்டத்தில் மலாவி பேராயர் Thomas Luke Msusa (இடது) SECAM நடத்திய கூட்டத்தில் மலாவி பேராயர் Thomas Luke Msusa (இடது)  

சிறாரின் பாதுகாப்பை உறுதிசெய்ய அழைப்பு

ஆப்பிரிக்கக் குழந்தைகளைப் பாதுகாப்பதையும், அதற்குகந்த ஒரு சூழலை உருவாக்கித் தருவதையும் கடமையாக கொண்டுள்ள ஆப்பிரிக்க திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

சிறாரைப் பாதுகாப்பது, நற்செய்தியின் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருப்பதால், சிறாருக்குகந்த பாதுகாப்பானச் சுழலை உருவாக்கிக் கொடுப்பது திருஅவையின் கடமையாகிறது என்ற கருத்து, ஆப்பிரிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் ஒன்றிணைந்த அமைப்பான SECAM நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய மலாவி பேராயர் Thomas Luke Msusa  அவர்கள், குழந்தைத் தொழில், மனித வர்த்தகம், சிறார் இராணுவம் போன்ற நிலைகளில் இருந்து சிறார்களைக் காப்பாற்ற SECAM அமைப்பின் அனைத்து ஆயர்களும், திருஅவைப் பணியாளர்களும் உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆப்பிரிக்க சமுதாயத்தின் குழந்தைகளைப் பாதுகாப்பதையும், அதற்குகந்த ஒரு சூழலை உருவாக்கித் தருவதையும் தங்கள் கடமையாகவும், சவாலாகவும் கொண்டு ஆப்ரிக்க திருஅவை செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், பேராயர் Msusa.

நமக்கு அடுத்திருப்பவரை அன்புகூர கட்டளைப் பெற்றுள்ள நாம், சிறார்களை அதிகம் அதிகமாக அன்புகூர்ந்து, சமுதாயத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என, பேராயர் Msusa அவர்கள் மேலும் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2019, 16:17