தங்கள் மடலை செய்தியாளர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கும் வெனிசுவேலா ஆயர்கள் தங்கள் மடலை செய்தியாளர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கும் வெனிசுவேலா ஆயர்கள் 

வெனிசுவேலா ஆயர்களின் விண்ணப்ப மடல்

வெனிசுவேலா நாட்டில் நிலவும் மிகக் கடினமான சமுதாய, பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் குறித்து, அந்நாட்டு ஆயர்கள், தங்கள் எண்ணங்களை, ஒரு மடல் வடிவில் வெளியிட்டுள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெனிசுவேலா நாட்டில் நிலவும் மிகக் கடினமான சமுதாய, பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் குறித்து, அந்நாட்டு ஆயர்கள், தங்கள் எண்ணங்களை ஒரு மடல் வடிவில் வெளியிட்டுள்ளனர்.

இறைமக்கள் அனைவருக்கும், வெனிசுவேலா நாட்டில் வாழும் நல்மனம் கொண்டோர் அனைவருக்கும் என்று ஆரம்பமாகும் இந்த மடலை, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்,  பேராயர் José Luis Azuaje Ayala, அவர்களோடு இணைந்து, துணைத் தலைவர்களான Mario Moronta Rodríguez, Raúl Biord Castillo என்ற இரு ஆயர்கள், மற்றும் பொதுச்செயலரான ஆயர், José Trinidad Fernández Angulo ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு மனிதரும் தங்கள் மாண்பையும் உரிமைகளையும் காப்பது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், தேவையான மனமாற்றம் என்ற மூன்று முக்கிய கருத்துக்களில் ஆயர்களின் இம்மடல் அமைந்துள்ளது.

மனமாற்றத்தையும், ஒப்புரவையும் வலியுறுத்தும் தவக்காலத்தில், வெனிசுவேலா நாட்டில் அரசு அதிகாரிகள், இராணுவத்தினர், எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென்று ஆயர்களின் மடல் விண்ணப்பிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2019, 15:53