இந்தியத் தேர்தலில் வாக்குகளைப் பதிவுசெய்யும் மின்னணு இயந்திரங்கள் இந்தியத் தேர்தலில் வாக்குகளைப் பதிவுசெய்யும் மின்னணு இயந்திரங்கள் 

புனித வியாழன் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

புனித வாரத்தில் பல வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும் என்பதையும், அவை கத்தோலிக்கருக்கு மிகவும் முக்கியமான வழிபாடுகள் என்பதையும் கூறி, ஆயர்கள் விடுத்த விண்ணப்பத்தை, தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் பொதுத் தேர்தலில், ஏப்ரல் 18, புனித வியாழனை, வாக்களிக்கும் நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தமிழக ஆயர்கள், அந்த நாளை மாற்றியமைக்குமாறு விடுத்த விண்ணப்பத்தை, தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

தமிழகத்தில் 50 இலட்சம் கத்தோலிக்கர்கள் உள்ளனர் என்றும், தமிழகத்தில் உள்ள 2,800க்கும் அதிகமான கத்தோலிக்க கல்விக் கூடங்களில், பலவற்றில், வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்பதையும் நினைவுறுத்தி, தமிழக ஆயர்கள் சார்பில் மதுரைப் பேராயர், அன்டனி பாப்புசாமி அவர்கள், தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பம் விடுத்திருந்தார்.

புனித வாரத்தில் பல வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும் என்பதையும், அவை கத்தோலிக்கருக்கு மிகவும் முக்கியமான வழிபாடுகள் என்பதையும் கூறி, ஆயர்கள் விடுத்த விண்ணப்பத்தை, தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

அஸ்ஸாம், பீஹார், சத்தீஸ்கர், கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உட்பட, 13 மாநிலங்களில், ஏப்ரல் 18, புனித வியாழனன்று, வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மேலும், நடைபெறவிருக்கும் தேர்தல்களில், கத்தோலிக்கர் அனைவரும், தங்கள் வாக்களிக்கும் உரிமையை, தவறாமல் பயன்படுத்தத்தவேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவை சார்பிலும், தமிழக ஆயர்கள் சார்பிலும், மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாம் ஒவ்வொருவரும், நமக்காகவும், நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், நாட்டின் தலைமையை முன்னேற்றவும் இந்தத் தேர்தலில் நமது புனிதமான பணியை மேற்கொள்வோம் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி மடலில் கூறியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2019, 15:43