வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான பேராலயத்தை பார்வையிடும் அரசுத்தலைவர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான பேராலயத்தை பார்வையிடும் அரசுத்தலைவர் 

பிலிப்பீன்சில் பேராலயத்தை தாக்கியவர்கள் சரண்

பிலிப்பீன்ஸ் நாட்டில், 23 பேரின் மரணத்திற்கு காரணமான கோவில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுள் ஐவர் சரண்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் பிலிப்பீன்சின் ஜோலோ நகர் பேராலயத்தை குண்டு வைத்து தாக்கிய நிகழ்வையொட்டி, அபு சாயிஃப் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 5 பேர் சரணடைந்துள்ளனர்.

சனவரி மாதம் 27ம் தேதி பிலிப்பீன்சின் சுலு மாவட்டத்தில் உள்ள ஜோலோ நகரின் கார்மேல் நமதன்னை பேராலயத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 23 பேரின் இறப்புக்கும், ஏறத்தாழ 100பேரின் படுகாயமடைதலுக்கும் காரணமான தீவிரவாதக்குழுவைச் சேர்ந்த 5 பேர், தற்போது காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.

பேராலயத்தின் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் படையைச் சார்ந்தவர்களை பாதுகாப்புடன் அப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக ஒத்துக்கொண்ட இந்த ஐவரும் தற்போது சரணடைந்துள்ளனர்.

இந்த ஐவரும் சார்ந்திருக்கும் அபு சாயிஃப் தீவிரவாதக்குழு, இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட ஜோலோ பகுதியின் காடுகளில் மறைந்திருந்து செயல்பட்டு வருகின்றது. (AP)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2019, 15:05