இளையோர் விழிப்புணர்வு முயற்சி இளையோர் விழிப்புணர்வு முயற்சி 

நேர்காணல் – இந்திய YCS, YSM இயக்கம்

1939ம் ஆண்டு நவம்பர் 17ம் நாளன்று, செக்கோஸ்லாவாக்கியாவில், நாத்சி ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பை எதிர்த்து பிராக் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்நாள் உலக மாணவர் தினமாகும்

மேரி தெரேசா - வத்திக்கான்

1939ம் ஆண்டில், செக்கோஸ்லாவாக்கியாவில், நாத்சி ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பை எதிர்த்து பிராக் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அச்சமயம், நாத்சி படையினர் மாணவர்கள் பலரைக் கொன்றுவிட்டு, பலரை வதைமுகாம்களுக்குக் கொண்டு சென்றனர். இந்த நாளை நினைவுகூரும் விதமாக, நவம்பர் 17ம் நாள், உலக மாணவர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் தொடர்பாக, செல்வி இரேச்சல் லூயிஸ் பெட்ரீஷியா அவர்களைச் சந்திப்போம். இவர், இந்தியாவின் YCS அதாவது இளம் கத்தோலிக்கர் மாணாக்கர் இயக்கம் மற்றும், YSM அதாவது இளம் மாணாக்கர் இயக்கத்தின் தேசிய செயலாளர். இவர், சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில், உளவியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்த இயக்கத்தின் பன்னாட்டு அமைப்பு உரோம் நகரில் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்கு உரோம் வந்திருந்தார், செல்வி இரேச்சல் பெட்ரீஷியா

நேர்காணல் – இந்திய YCS, YSM இயக்கம் – இரேச்சல் பெட்ரீஷியா

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2018, 11:10