பிலிப்பீன்ஸில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை ஊக்குவிக்கும்  காரித்தாஸ் பிலிப்பீன்ஸில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை ஊக்குவிக்கும் காரித்தாஸ் 

பிலிப்பீன்ஸ் ஏழைச் சமூகங்களுக்கு திருஅவை உதவி

காரித்தாஸ் பிலிப்பீன்ஸ், Sorsogon மறைமாவட்டத்தில் மிகப்பெரிய சூரியஒளி மின்சாரத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாடு முழுவதும், ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கென, புதுப்பிக்கத்தக்க மின்சக்தியைப் பயன்படுத்தும் திட்டத்தை ஊக்குவித்து வருகின்றது, அந்நாட்டு ஆயர் பேரவையின் சமூகநல அமைப்பான காரித்தாஸ்.

சூரிய ஒளியில் மின்சக்தி தயாரிக்கும் திட்டத்தை நடத்திவரும் அந்நாட்டு அமைப்புடன் சேர்ந்து, ஏழை மக்களுக்கு, புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது, பிலிப்பீன்ஸ் காரித்தாஸ்.

இதன் வழியாக, வறிய சமூகங்கள் மத்தியில் மின்சக்தி பற்றாக்குறையை அகற்றுவதற்கு முயற்சித்துவரும் காரித்தாஸ் அமைப்பு, அந்நாட்டின் 85 மறைமாவட்டங்களில், 43ல், சூரிய ஒளித்தகடுகளை அமைக்கும் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது. 

ஜூலை 31ம் தேதி, Sorsogon மறைமாவட்ட பேராலயத்தில் மூன்று மிகப் பெரிய சூரிய ஒளித்தகடுகளை அமைத்துள்ளது, பிலிப்பீன்ஸ் காரித்தாஸ். (UCAN) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2018, 15:33