காமரூன் பேராயர் Samuel Kleda Douala காமரூன் பேராயர் Samuel Kleda Douala 

இராணுவத்தால் அருள்பணியாளர் சுட்டுக் கொலை

காமரூன் நாட்டில் ஒரே வாரத்தில் இரு அருள்பணியாளர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

காமரூன் நாட்டின் Buea மறைமாவட்ட கத்தோலிக்க கல்வித்துறை செயலரும், Bomaka பங்குதள அருள்பணியாளருமான Alexander Sob Nougi என்பவர் கடந்த வெள்ளியன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காமரூன் நாட்டின் Muyuka எனுமிடத்தில் தன் உறவினர்களைப் பார்க்கச் சென்ற இந்த அருள்பணியாளரின் மீது, இராணுவத்தின் குண்டுகள் தவறுதலாக பாய்ந்தன என ஒரு சாராரும், இவரின் வண்டியை சோதனைச் செய்து அதிலிருந்து எதையோ எதிர்பார்த்து ஏமாந்த இராணுவத்தால் இவர் வேண்டுமென்றே சுடப்படார் என ஒரு சாராரும் கூறி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இராணுவ துருப்புக்களால் கொலைச் செய்யப்பட்டுள்ள இரண்டாவது அருள்பணியாளர் இவர் ஆவார்.

இம்மாதம் 14ம் தேதி காமரூன் நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள Batibo என்ற நகருக்கு வந்த கானா நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவர் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2018, 16:26