போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா குழந்தைகள் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா குழந்தைகள்  

காசா போர், கற்பனை செய்யமுடியாத அளவுக்குக் குழந்தைகளைப் பாதிக்கிறது!

காசாவில் பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அங்குப் பல குடும்பங்களைத் துயரங்களுக்கு உள்ளாக்கும் பெரும்கவலை நிறைந்த சூழல்கள் முடிவுக்கு வரவேண்டும் : யுனிசெஃப் தலைமை இயக்குனர் Catherine Russell.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் நிகழ்ந்து வரும் போர் குழந்தைகள் மீது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் யுனிசெஃப் தலைமை  இயக்குனர் Catherine Russell.

குழந்தைகளின் நகரமான இரஃபாவில் நிகழும் தாக்குதல்கள் மேலும் அதிகரிப்பதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்றும், அங்குக் குழந்தைகளின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மே 2, இவ்வியாழனன்று, தனது எக்ஸ் தள பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார் Russell.

மேலும் பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அங்குப் பல குடும்பங்களைத் துயரங்களுக்கு உள்ளாக்கும் பெரும்கவலை நிறைந்த சூழல்கள் முடிவுக்கு வரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார் Russell.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2024, 15:24