தேடுதல்

லெபனோனில் போர் பாதிப்புகள் லெபனோனில் போர் பாதிப்புகள்   (AFP or licensors)

தென் லெபனோன் மோதல்களால் குழந்தைகள் பாதிப்பு

தென்பகுதி மோதல்களால் 90 ஆயிரம் பேர் புலம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 30 ஆயிரம் பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தென் லெபனோனில் கடந்த ஆண்டு அக்டோபரில் மோதல்கள் துவங்கியதிலிருந்து அப்பகுதியின் குழந்தைகளுள் 75 விழுக்காட்டினர் ஏழ்மையின் மிகப்பெரும் தாக்கத்தை அனுபவித்து வருவதாக குழந்தைகளுக்கான நிதி அமைப்பு யுனிசெப் அறிவித்துள்ளது.

தென்பகுதி மோதல்களால் 90 ஆயிரம் பேர் புலம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 30 ஆயிரம் பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கிறது. 

இந்த மோதல்களால் உயிரிழந்த 344 பேருள் 8 பேர் குழந்தைகள் எனவும், படுகாயமடைந்த 1359 பேரில் 75 பேர் குழந்தைகள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது தண்ணீர் அங்காடிகள் சேதமாகியுள்ளதாகவும், 70 பள்ளிகளும் 23 மருத்துவ  நல மையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் கூறும் யுனிசெப்பின் அறிக்கை, குழந்தைகளும் குடும்பங்களும் சார்ந்திருந்த உள்கட்டமைப்புகளும், அடிப்படை உதவிக்கான மையங்களும் சேதமடைந்துள்ளதாகவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 20,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2024, 15:24