தேடுதல்

தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கூட்டமைப்பினருடன் திருத்தந்தை தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கூட்டமைப்பினருடன் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

இளையோர்மீது அக்கறை காட்டுங்கள்!

பயிற்சிப் பாதைகள் என்பது ஒரு நபரின் ஆன்மிக, கலாச்சார மற்றும் தொழில் பரிமாணங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியின் சேவையில் இருப்பது முக்கியம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

யாரையும் விட்டுவிடாதீர்கள், இளையோர்மீது அக்கறைகாட்டுங்கள், வாய்ப்புகள் இல்லாதவர்களை அல்லது பின்தங்கிய சமூக சூழ்நிலைகளில் இருந்து வருபவர்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 3, இவ்வெள்ளியன்று, தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கூட்டமைப்பினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களிடம் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரின் வாழ்வில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

உங்களது கல்வி மற்றும் பயிற்சி வழியாக நீங்கள் குறிப்பாக, சமூக மற்றும் திருஅவை வாழ்க்கையின் விளிம்பில் இருக்கும் இளைஞர்களுக்குச் சிறப்பு கவனிப்பையும் கவனத்தையும் ஒதுக்குகிறீர்கள் என்ற விதத்தில் இளைஞர்கள், பயிற்சி, தொழில் ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் உங்கள் அர்ப்பணிப்பைக் குறிக்கும் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன் என்று உரைத்தார்.

இளையோர்

முதலில், இளையோர். இவர்கள் நம் காலத்தின் மிகவும் பலவீனமாகப் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவகையினர் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, எப்பொழுதும் திறமைகள் மற்றும் திறன்கள் நிறைந்த இளையோர், சில மானுடவியல் நிலைமைகள் மற்றும் நாம் வாழும் காலத்தின் பல்வேறு கலாச்சார அம்சங்களால் குறிப்பாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

வேலையில்லாமல் மனவிரக்தியில் தவிக்கும் நம் காலத்து இளையோரை நினைக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது என்று கூறிய திருத்தந்தை,  இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வேளையில், ​​கல்வி மற்றும் பயிற்சியை கைவிடுவது ஒரு சோகம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த இளையோர் அனைவரும் குடும்பம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின் இன்றியமையாத ஆதரவைப் பெறவில்லை என்பதால் அவர்களைக் கவனித்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம் என்று கூறிய திருத்தந்தை, குறிப்பாக ஏழைகள், மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும், புலம்பெயர்ந்தோர் யாவரும் கடுமையான ஆபத்தில் உள்ளனர் என்றும் எடுத்துக்காட்டினார்.

பயிற்சி

இரண்டாவது வார்த்தை பயிற்சி என்றும், இது எதிர்காலத்தை உருவாக்குவதில் ஒரு தவிர்க்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிகள் காரணமாக வேலையின் மாற்றங்கள் பெருகிய முறையில் சிக்கலானவைகளாக உள்ளன என்றும் எடுத்துக்காட்டினார்.

எந்தவொரு கல்வி அனுபவத்திலும் உங்களுக்கு குடும்பங்களுடன் வலுவான இணைப்பு தேவை என்றும்  நீங்கள் நிறுவனங்களுடன் நலமான மற்றும் பயனுள்ள உறவு  கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை, இந்நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என்றும் விண்ணப்பித்தார்.

வேலை (தொழில்)

இறுதியாக, தொழில். வாழ்க்கையில் வாழ்வதற்கு ஒரு மனிதருக்குத் தொழில் அவசியம் வேண்டும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, ஒருவர் செய்யும் தொழிலை வைத்துதான் அந்த நபர் அறிந்துகொள்ளப்படுகிறார் என்றும் உரைத்தார்.

வேலை என்பது நமது வாழ்க்கை மற்றும் தொழிலின் அடிப்படை அம்சமாகும். என்றாலும்கூட, வேலையின் அர்த்தத்தின் சீரழிவை இன்று நாம் காண்கிறோம், இது ஒருவரின் மனித மாண்பு மற்றும் பொது நன்மைக்கான பங்களிப்பின் வெளிப்பாடாக இல்லாமல் பணம் சம்பாதிப்பது தொடர்பாக பெருகிய முறையில் விளக்கப்படுகிறது என்றும் கவலை தெரிவித்தார் திருத்தந்தை.

இச்சூழலில் பயிற்சிப் பாதைகள் என்பது ஒரு நபரின் ஆன்மிக, கலாச்சார மற்றும் தொழில் பரிமாணங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியின் சேவையில் இருப்பது முக்கியம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இளைஞர்கள், கல்வி, தொழில் போன்ற மூன்றிலும்  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2024, 15:59