தேடுதல்

பஞ்சத்தை வென்ற இஸ்ரயேலர் பஞ்சத்தை வென்ற இஸ்ரயேலர் 

தடம் தந்த தகைமை – பஞ்சம் தீர்ந்த மகிழ்வில் இஸ்ரயேலர்

ஆண்டவரின் வாக்கின்படி ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்பட்டன. பஞ்சம் தீர்ந்த மகிழ்வில் இஸ்ரயேலர் மகிழ்ந்து கொண்டாடினர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இஸ்ரயேல் அரசனுடைய பணியாளருள் ஒருவன், “இங்கே எஞ்சியுள்ள குதிரைகளுள் ஐந்தினைச் சிலர் ஓட்டிக்கொண்டு செல்லட்டும். இங்கே எஞ்சியுள்ள இஸ்ரயேலர் அனைவருக்கும் நேரிடுவது அவர்களுக்கும் நேரிடட்டும். ஆம்; ஏற்கெனவே அழிவுக்குள்ளான இஸ்ரயேலர் அனைவரையும்போல் இவர்களும் அழிவுக்கு உள்ளாவர். எனவே, அவர்களை அனுப்பிப் பார்ப்போம்” என்றான். அவ்வாறே, இரண்டு குதிரைத் தேர்கள் கொண்டு வரப்பட்டன.

அவற்றில் அரசன் சிலரைச் சிரியர் பாசறைக்கு அனுப்பி, “சென்று பாருங்கள்” என்று கட்டளையிட்டான். அவர்களோ சிரியரைத் தேடி யோர்தான்வரை போனார்கள். இதோ! சிரியர் தப்பிஓடிய வேகத்தில் விட்டெறிந்த ஆடைகளும் படைக்கலன்களும் சிதறிக் கிடந்தன. அத்தூதர்கள் அரசனிடம் திரும்பிவந்து அதைத் தெரிவித்தனர். உடனே மக்கள் புறப்பட்டுச் சென்று சிரியர் பாசறையைக் கொள்ளையடித்தனர். இவ்வாறு, ஆண்டவரின் வாக்கின்படி ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்பட்டன. பஞ்சம் தீர்ந்த மகிழ்வில் இஸ்ரயேலர் மகிழ்ந்து கொண்டாடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2024, 09:09