தேடுதல்

உக்ரைன் சிறாரின் ஓவியம் உக்ரைன் சிறாரின் ஓவியம்  

போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நம்பிக்கை அளிக்கும் கூட்டணி

"உலகளாவிய போர் மற்றும் மோதல்களுக்கு மத்தியில், புதிதாக உருவாக்கப்பட்ட "உலகளாவிய குழந்தைகள்" கூட்டணியானது, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் நீடித்த மாற்றத்தையும் கொண்டு வருவதற்காக பாடுபடுகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மோதல்கள் மற்றும் போரினால் ஏற்படும் காயங்களை, தொடர்ந்து இவ்வுலகம் அனுபவித்து வரும் நிலையில், போரின் கொடூரங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நம்பிக்கையையும் மாண்பையும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டுக் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் குறித்த முதல் மன்னாட்டு உச்சிமாநாட்டின்போது, ​​உரோமில் ஜனவரி 29 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட “Unbroken Kids" கூட்டணியானது போரினால் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஆழமான உடல் மற்றும் உளவியல் வடுக்களை நிவர்த்தி செய்ய முயல்கிறது.

இத்தாலியின் தேசிய மிசெரிகோர்தியே கூட்டமைப்பு,  Unbroken அறக்கட்டளை மற்றும் 5P ஐரோப்பா அறக்கட்டளை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த முயற்சியானது, மனிதாபிமான நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பால் வரக்கூடிய ஆற்றலை நிரூபித்துள்ளது.

குழந்தைகளுக்கான இக்கூட்டமைப்பானது, அதன் பங்காளர்கள் வழியாக, போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவி, உளவியல் ஆதரவு மற்றும் நிலையான மறுவாழ்வு ஆகியவற்றை வழங்கும் இலக்கு திட்டங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"உலகளாவிய போர் மற்றும் மோதல்களுக்கு மத்தியில், புதிதாக உருவாக்கப்பட்ட "உலகளாவிய குழந்தைகள்" கூட்டணியானது, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் நீடித்த மாற்றத்தையும் கொண்டு வருவதற்காக பாடுபடுகின்ற மனிதாபிமான குழுக்களின் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பை ஒரு முழுமையான முன்னுரிமையாக மாற்ற வேண்டும். யூபிலி ஆண்டைக் கொண்டாடும் வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் வெறும் புள்ளிவிவரங்களாக மாற மாட்டார்கள், உலகம் அவர்களின் தேவைகளை இரக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அங்கீகரிக்கும் என்றும் நம்பிக்கையின் தெளிவான அடையாளத்தையும் இந்த முயற்சி காட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 பிப்ரவரி 2025, 14:31