தேடுதல்

மோதலால் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து செல்லும் மக்கள் மோதலால் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து செல்லும் மக்கள்   (AFP or licensors)

காங்கோ குடியரசில் மோதலால் மூன்று மாதங்களில் 6,58,000 பேர் இடம்பெயர்வு!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, குழந்தைகள் உட்பட பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனுபவிக்கும் கொடிய துயரங்கள், மற்றும் அத்தியாவசியத் தேவைகளின் பற்றாக்குறை ஆகியவற்றைக் குறித்து தனது அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மோதலின் காரணமாக, 2,82,000 குழந்தைகள் உட்பட மூன்று மாதங்களில் 6,58,000 பேர் இடம்பெயர்ந்துள்ள கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில், மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியால் தான் பெரிதும் கவலை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

ஜனவரி 30, வியாழக்கிழமை இன்று, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், தூய்மையான தண்ணீர், மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்க அவசரமாக $22 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தைக் கோரியுள்ளதாகவும் உரைத்துள்ளது.

மோதல் கோமாவை (Goma) எட்டியுள்ள வேளை, குடும்பங்கள் மீண்டும் மீண்டும் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்றும், மின்சாரம், தண்ணீர், இணையம் போன்ற அடிப்படை சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிகவும் துயரமான நிலையில் உள்ளனர் என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மேலும் இம்மோதலால் குழந்தைகள் பெரிய அளவில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர் என்றும், இதன் காரணமாக, நோய் ஏற்படல், குடும்பங்களில் இருந்து பிரிந்து செல்லல் மற்றும் சுரண்டகளில் சிக்கிக்கொள்ளும்  வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது இந்நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜனவரி 2025, 15:08