தேடுதல்

பாகிஸ்தானிய பெண்கள் பாகிஸ்தானிய பெண்கள்  

கல்வியும், சுய விழிப்புணர்வுமே கட்டாயத் திருமணங்களுக்குத் தீர்வு

ஒரு பெண் பொருளாதார ரீதியாக நிலையானவராக இல்லாவிட்டால், அவர் தன் குடும்பத்தை சார்ந்துதான் இருக்கவேண்டும் : சமூக விஞ்ஞானி Madiha Shah

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாகிஸ்தானில் கட்டாயத் திருமணங்களை எதிர்த்துப் போராட கல்வியும், சுய விழிப்புணர்வும் மிகவும் முக்கியமானவை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார் அந்நாட்டைச் சேர்ந்த சமூக அறிவியலாளர் Madiha Shah  

இளம் பெண்களின் கட்டாயத் திருமணங்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக இளைய தலைமுறையினர் அனைவரும் கல்வியில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும் முன்மொழிந்துள்ளார் சமூக அறிவியலாளர் Shah

ஒரு பெண் பொருளாதார ரீதியாக நிலையானவராக இல்லாவிட்டால், அவர் தன் குடும்பத்தை சார்ந்துதான் இருக்கவேண்டுமெனவும், அத்தகைய நிலையில் அவரால் வளர்ச்சிக்கான எந்தையொரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் Shah.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைப் பற்றி குடும்ப உறுப்பினர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் குறிப்பாக, திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்ட பெண்களையும், இறுதியில் விவாகரத்து பெற்ற சிலரையும் தான் நேர்காணல் செய்ததாக உரைத்துள்ள Shah அவர்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணங்களே பொதுவானவையாக இருக்கின்றனர் என்றும், ஒருகுடும்பத்திலுள்ள ஆண் அல்லது பெண் யாருடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை அவர்தம்பெற்றோறோ அல்லது அக்குடும்பத்தின் வயதான உறுப்பினர்களோதான் தீர்மானிக்கிறார்கள் என்றும் விளக்கியுள்ளார்.

உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் நடைமுறைப் பழக்கங்களும் அவர்களிடையே உள்ளன என்றும், இதனையும் அக்குடும்பத்தில் உள்ள வயதானவர்களே யாருடன் மகள் அல்லது மகன் திருமணம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் Shah

கட்டாயத் திருமணம் செய்யும் நடைமுறை முக்கியமாக சிறுபான்மைக் குழுக்களின் ஒரு பகுதியாக இருக்கும் இளம் பெண்களை உள்ளடக்கியது என்றும், எடுத்துக்காட்டாக கிராமப்புறங்களில் வாழும் கிறிஸ்தவ, இந்து, அஹ்மதியர்கள் அல்லது கலாஷ் இனத்தவரிடம் இது நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் Shah

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில், மத உரையாடல்கள் வழியாக  இந்த வகையான தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றாலும், கல்வியும் சுயவிழிப்புணர்வுமே இதற்கானத் தீர்வாக அமையமுடியும் என்று தீர்க்கமாகக் கூறியுள்ளார் Shah.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2023, 15:41