தேடுதல்

புலம்பெயர்ந்துள்ள மக்கள் புலம்பெயர்ந்துள்ள மக்கள் 

கிழக்கு ஆசியா-பசிபிக் பகுதி சிறாரைப் பாதிக்கும் பருவநிலை நெருக்க

கடந்த 50 ஆண்டுகளில், வெள்ளம் 11 மடங்கு, புயல் நான்கு மடங்கு, வறட்சி இரண்டு மடங்கு , நிலச்சரிவுகள் ஐந்து மடங்கு ஏற்பட்டுள்ளது

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிழக்கு ஆசிய-பசிபிக் பகுதி சிறார்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும்,  பருவநிலை நெருக்கடி அவர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் கூறியுள்ளார் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதி UNICEF இயக்குனர் தேபோரா கோமினி.

UNICEF இன் அண்மைய அறிக்கையானது, கடந்த ஐம்பது ஆண்டுகளாக காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்கள் அதிகரித்துள்ளதால், பருவநிலை மாற்றம் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளை அதிகமான பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சிறார் தங்களது தாத்தா பாட்டிகளை விட ஆறு மடங்கு அதிகமான காலநிலை தொடர்பான பேரழிவுகளை எதிர்கொள்கின்றனர் என்றும், தீவிர வானிலை மாற்றங்களின் அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், கடந்த 50 ஆண்டுகளில், இப்பகுதிகளில் வெள்ளம் 11 மடங்கு, புயல் நான்கு மடங்கு, வறட்சி இரண்டு மடங்கு, நிலச்சரிவுகள் ஐந்து மடங்கு ஏற்பட்டுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.

இத்தகைய கால நிலை மாற்றத்தால் சிறார் தங்களது குழந்தைப் பருவம், வாழ்வதற்கும் வளருவதற்கும் உள்ள உரிமை போன்றவற்றை இழக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் தேபோரா கோமினி.

மேலும் 2,10,000 அதிகமான சிறார் சூறாவளியாலும், 1,40,000 சிறார் தண்ணீர் பற்றாக்குறையாலும்,  1,20,000 மக்கள் கடலோர வெள்ளத்தாலும், 4,60,000 பேர் காற்று மாசுபாட்டாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

காலநிலை மாற்றாத்தால் ஏற்படும் விளைவுகள் ஏற்கனவே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்குகின்றன என்றும், வறுமையால் பின்தங்கிய குழந்தைகளுக்கு அவற்றின் தாக்கங்களைச் சமாளிப்பது மிகவும் கடினமாகின்றன என்றும் கூறியுள்ள, கோமினி அவர்கள், சில உடனடி ஆபத்துக்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம், ஆனால் இந்த அபாயங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள குறைந்தபட்ச வழிமுறைகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 

ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள சிறார் சுற்றுச்சூழல் தொடர்பான ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின் பகுதிகளில் தீவிர வானிலை மாற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், யுனிசெஃப் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2023, 08:15