தேடுதல்

காவலாளர்கள் பணியில் காவலாளர்கள் பணியில்  (ANSA)

எழுத்து சுதந்திரத்திற்கு எதிராக சீனா நான்காவது இடம்

சீனாவில் 90 எழுத்தாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், கடந்த ஆண்டுகளில் ஆறு புதிய வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன

மெரினா ராஜ் – வத்திக்கான்

சீனாவின் அரசியலமைப்பு பேச்சு சுதந்திரத்திற்கு உறுதி அளிக்கிறது, ஆனால் நாட்டின் தற்போதைய கம்யூனிஸ்ட் ஆட்சியானது கருத்து சுதந்திரத்தை மிக மோசமாக மீறுகின்றது என்றும், எழுத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதில் சீனா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என்றும், PEN அமெரிக்கா என்னும் எழுத்தாளர் கூட்டமைப்பானது தெரிவித்துள்ளது.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட PEN அமெரிக்கா என்னும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் எழுத்தாளர் கூட்டமைப்பானது, ஏப்ரல் 27 அன்று வெளியிட்ட தகவல்களின்படி எழுத்தாளர்களின் மோசமான சிறைக்காவலர் போன்று சீனா உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவில் 90 எழுத்தாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், கடந்த ஆண்டுகளில் ஆறு புதிய வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் சமூக ஊடக வர்ணனையாளர்கள், தேசத்துரோகம் மற்றும் பிற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கடந்த ஆண்டு உலகளவில் 311 எழுத்தாளர்கள் மற்றும் நிருபர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக PEN அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனாவின் அரசுத்தலைவர் ஜி ஜின்பிங் அரசியல் அதிகாரத்தை ஒருங்கிணைத்து, சுதந்திரமான கருத்துக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறியதையும் PEN அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கோவிட்-19 பொதுத்தடையினால் மக்கள் கோபம் அதிகரித்தது என்றும், எதிர்ப்புகளுக்கு மத்தியில், அரசுத்தலைவர் பதவி விலக வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி மக்கள் போராடியதையும் அக்குழு நினைவுபடுத்தியுள்ளது.

சீன அரசுத் தலைவரின் செயல் மற்றும் பேச்சுக்கள் சீன புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாட்டினரை உலகெங்கிலும் உள்ள நகரங்களில் சுவரொட்டி பிரச்சாரத்தைத் தொடங்க தூண்டியது என்றும், சீனாவில், கலாச்சார உற்பத்தியின் அனைத்து அம்சங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும், தன்னிச்சையான ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவது கடுமையான ஆபத்தை உள்ளடக்கியது என்றும் அக்குழு கூறியுள்ளது.

ஹாங்காங்கில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தாங்கள் வாழும் பகுதிகளுக்குள் வெவ்வேறு அரசியல் மற்றும் சட்ட சவால்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்ட அவ்வறிக்கையானது, கடந்த ஆண்டு, ஒன்பது ஹாங்காங் எழுத்தாளர்கள் காவலில் இருந்தனர் என்றும், 2020ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட, தேசிய பாதுகாப்பு சட்டத்திற்குப் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவைத் தொடர்ந்து ஈரானில் 57 எழுத்தாளர்களும், சவுதி அரேபியாவில் 20 எழுத்தாளர்களும், பெலாரஸ், மியான்மர் மற்றும் வியட்நாமில், 16 நிருபர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். (ucan)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 மே 2023, 11:42