தேடுதல்

கனடாவின் பூர்வீக இனமக்களுடன் திருத்தந்தை கனடாவின் பூர்வீக இனமக்களுடன் திருத்தந்தை   (AFP or licensors)

பூர்வீக மக்களுக்கான வத்திக்கான் பணி குறித்து ஐ.நா. பாராட்டு

காலனி ஆதிக்க மனப்பான்மையை கைவிட்டு, ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, தவறுகளின் விளைவுகளை நிவர்த்திச் செய்ய இரு தரப்பினரும் முன்வரவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

15ஆம் நூற்றாண்டில் புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்புடைய திருஅவைக் கோட்பாட்டை, அதாவது Doctrine of Discovery என்பதனை ஒதுக்கி வைக்கும் திருஅவையின் செயலைப் பாராட்டியுள்ள ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர், மற்ற நாடுகளும் இதனை பின்பற்றவேண்டும் என கேட்டுள்ளார்.

மார்ச் 30ஆம் தேதி வத்திக்கானின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி மேம்பாட்டுத்துறையின் தலைவர், கர்தினால் Michael Czerny அவர்கள், Doctrine of Discovery கோட்பாட்டைப் பற்றிய கூட்டறிகையை வெளியிட்டு, திருப்பீடம் மற்றும் வடஅமெரிக்க ஆயர்கள், உண்மையில் இது குறித்து வருந்துகிறார்கள் என்றும், இது பூர்வீக இனமக்களிடையே குணப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கும் உதவ வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இதனைக் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட பூர்வீக இனமக்களின் உரிமைகளுக்கான ஐ.நா. சிறப்பு அதிகாரி José Francisco Calí Tzay அவர்கள்,  காலனி மனநிலையை கண்டிப்பதில் திருஅவையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பூர்வீக இனமக்களின் நிலங்களையும் பொருட்களையும் உடைமையாக்கும் உரிமையை திருத்தந்தை காலனித்துவவாதிகளுக்கு வழங்கிய பதினைந்தாம் நூற்றாண்டின் மூன்று திருஅவை ஆணை மடல்கள், அமைதியைக் கொணரும் நோக்கத்தில் வழங்கப்பட்டவை என்றும், அது குறித்து திருஅவை வருத்தம் தெரிவிப்பதாகவும் கர்தினால் Czerny அவர்கள் கூறியதை வரவேற்றுள்ளார் ஐ.நா. அதிகாரி José Francisco.

காலனி ஆதிக்க மனப்பான்மையை அனைவரும் கைவிட்டு,  ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, அன்றைய தவறுகளின் விளைவுகளை நிவர்த்திச் செய்ய இரு தரப்பினரும் முன்வரவேண்டும் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளதையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார் ஐ.நா. அதிகாரி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2023, 14:19