தேடுதல்

இந்திய மக்கள் இந்திய மக்கள்   (ANSA)

நாட்டில் ஜனநாயக மதிப்பீடுகள் மதிப்பிழந்துவருவது குறித்து வருத்தம

வன்முறைகள் மற்றும் பகைமைச்சூழல் அதிகரிப்பும், ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதலும் அண்மைக்காலங்களில் இந்தியாவில் இடம்பெற்றுவருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் ஜனநாயக மதிப்பீடுகள் வலுவிழந்துவருவதாக அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது வெடித்த இந்து முஸ்லீம் கலவரத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ANHAD என்ற மக்களின் ஜனநாயகம் மற்றும் இணக்க வாழ்வுக்கான அமைப்பு, தன் 20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய வேளையில், நாட்டில் ஜனநாயக மதிப்பீடுகள் மதிப்பிழந்து வருவது குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

மனித உரிமை நடவடிக்கையாளர்கள், வழக்குரைஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள் இணைந்து ANHADன் 20ஆம் ஆண்டு நிறைவை ஏப்ரல் 15 அன்று சிறப்பித்தபோது, இந்தியாவில் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்ற கவலையை வெளியிட்டனர்.

வன்முறைகளின் அதிகரிப்பும், நாடு முழுவதும் பகைமைச்சூழல் அதிகரிப்பும், ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதலும் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுவருவதாக தன் கவலையை வெளியிட்ட இவ்வமைப்பின் நிறுவனர் Shabnam Hashmi அவர்கள், மக்களின் உரிமைகள், குறிப்பாக, பாகுபாடின்றி நடத்தப்படுவதற்கான உரிமை, மாண்புடன் வாழ்வதற்கான உரிமை போன்றவை மீறப்பட்டும், மீறப்படுபவர்கள் மீது நடவடிக்கை இன்றியும் தொடர்வதாகத் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு இந்து ஆதரவு கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீதிமன்றங்களின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும், பாராளுமன்ற செயல்பாடுகள் ஆட்யிலிருப்போருடன் சமரசம் செய்வதாக உள்ளன எனவும் குற்றஞ்சாட்டினார் Hashmi. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2023, 14:22