காலநிலை மாற்றத்தால் பாதிப்பிற்குள்ளாவது ஏழைகளே!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பெருமழை, பெருவெள்ளம், சூறாவளிகள், புயல்காற்று போன்றவற்றால் ஏழைகள்தாம் அதிகப் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளனர் இயற்கை ஆர்வலர்கள்.
கடந்த வாரத்தின் பிற்பகுதியில் மொசாம்பிக் மற்றும் மலாவியில் Freddy என்ற வெப்பமண்டல புயல் ஏற்படுத்திய பாதிப்பால் 200-க்கும் மேற்பட்டோர் இறந்ததைத் தொடர்ந்து இவ்வாறு கவலை தெரிவித்துள்ளனர் இயற்கை ஆர்வலர்கள்.
தூய்மையான நீர், உடல்நலம் மற்றும் உடல்நல வசதிகள், அத்துடன் அவசரகாலப் பணம் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்குவதற்கு மனிதாபிமான அமைப்புகள் தற்போது பேரழிவின் அளவை மதிப்பிட்டு வருகின்றன என்றும், ஆனால் அதேவேளையில், தொலைதூரப் பகுதிகளில் உள்கட்டமைப்புகள், பலவீனமடைந்து இருப்பதால் நிவாரணப் பணிகளைத் தொடர்வதில் அதிகம் தாமதம் ஏற்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள்.
தேவைப்படுபவர்களுக்கு முக்கிய உதவி கிடைப்பதை உறுதி செய்ய விரிவான பதில் தேவைப்படும் அதேவேளையில், இயற்கை ஆர்வலர்கள், நீண்ட காலமாக மலாவியின் அவலநிலையை எடுத்துக்காட்டியபோதிலும், அதன் மக்கள் அதற்குச் செவிமடுக்காததால், இப்போது அதற்கான பலனை அறுவடை செய்து வருகின்றனர் என்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அமர்வில், கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, அதன் பொதுச்செயலாளர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், வெள்ளம் மற்றும் கடலோர அரிப்பு முழு சமூகங்களையும் அதிகப் பாதிப்பிக்குள்ளாக்குவதால் அனைத்து மக்களும் புலம்பெயர்ந்து செல்ல நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்