தேடுதல்

உலக தொழுநோய் விழிப்புணர்வு நாள் உலக தொழுநோய் விழிப்புணர்வு நாள் 

வாரம் ஓர் அலசல் – உலக தொழுநோய் விழிப்புணர்வு நாள்

மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி மருத்துவர் ரீட்டா அவர்கள், இத்தாலியில் தொழுநோய்பிரிவு மருத்துவக்கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சி பாத்திமா நகரில் உள்ள தொழுநோய்ப்பிரிவு மருத்துவமனை உருவாகக் காரணமானவர்.
அருள்சகோதரி மருத்துவர் ரீட்டா . ம. ஊ. ச.

மெரினா ராஜ் - வத்திக்கான்

குஷ்டம், குஷ்டநோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப்பரவலாக அழைக்கப்படும்  தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும், ஜனவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை, உலகத் தொழுநோய் விழிப்புணர்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதி மற்றும் சுவாசக் குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டால் நோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களையே அதிகமாக தாக்குகின்றது.

இத்தகைய தொழு நோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி மருத்துவர் ரீட்டா  அவர்கள். இத்தாலியில் தொழுநோய் பிரிவு மருத்துவக்கல்வியில் முனைவர் பட்டம் பயின்றவர் திருச்சி பாத்திமா நகரில் உள்ள தொழுநோய்ப்பிரிவு மருத்துவமனை உருவாகக் காரணமானவர். தனது தன்னலமற்ற பணியாலும், தொண்டாலும் தனிமதிப்பு பெற்று திகழும் அருள்சகோதரி ரீட்டா, காசநோய் எச்ஐவி. மற்றும்  தோல்நோய் தொடர்பான மருத்துவக்கல்வியிலும் தகுதிபெற்றவர். 2023 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் தேதி இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று உலக மக்களால் சிறப்பிக்கப்பட இருக்கும் உலக தொழு நோய் விழிப்புணர்வு பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்கும் படி எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அருள்சகோதரி மருத்துவர் ரீட்டா அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2023, 12:07